உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

நவ.20-ல் ஆளுநர் ரவியின் பதிலைக் கேட்டு மைய அரசு தாக்கல்செய்ய உச்சநீதிமன்றம் ஆணை!

தமிழ்நாட்டு அரசாங்கத்தின் முடிவுகளுக்கும் சட்டப்பேரவை மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் இரவி முட்டுக்கட்டை போட்டுவருவதால் நிர்வாகம் கெடுகிறது என உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. அரசு வழக்கு தொடுத்தது. நேற்று இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. 

அப்போது, தலைமை நீதிபதி சந்திர சூட்,  ”அரசியலமைப்பின் பிரிவு 200-ன்படி சட்டப்பேரவையில் நிறைவேற் றப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும். மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கலாம். மசோதா நிதி மசோதாவாக இல்லாமல் இருந்தால், முடிவை நிறுத்திவைக்கலாம் அல்லது திருத்தம் செய்யப் பரிந்துரைத்து அரசுக்கு திருப்பி அனுப்பலாம் அல்லது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கலாம். ஆனால், எதுவுமே செய்யாமல் மசோதாக் ஆனால், மசோதாக்களைக் கிடப்பில் போட முடியாது.” என்று அழுத்தமாகக் கூறினார். 

”சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதாக்கள், அரசாணைகள் நீண்ட காலமாக கிடப்பில் போட்டிருப்பது கவலைக்குரியது. மத்திய உள்துறை அமைச்சகம் ஆளுநரிடம் கேட்டு இதுகுறித்து விரிவான பதில் தாக்கல் செய்யவேண்டும். நவ.20ஆம் தேதி நடைபெறும் அடுத்த விசாரணையில் அட்டர்னி ஜெனரல் அல்லது சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்துக்கு வரவேண்டும்.” என்றும் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com