நெருப்போடு விளையாடுவதா?- பன்வாரிலால் மீது உச்ச நீதிமன்றம் கடும் காட்டம்

பன்வாரிலால் புரோகித்
பன்வாரிலால் புரோகித்
Published on

சட்டப்பேரவை கூட்டத்தொடர் செல்லுபடியாகுமா என ஆளுநர் கேள்வி எழுப்பமுடியாது என்றும் அதற்காக மசோதாக்களைக் கிடப்பில் போடமுடியாது; நெருப்புடன் விளையாடுகிறீர்கள் என்றும் பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை உச்சநீதிமன்றம் காட்டமாக இடித்துரைத்துள்ளது.

பஞ்சாப் மாநில சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரை ஆளுநர் பன்வாரிலால் சம்பிரதாயப்படி முடித்துவைக்க வேண்டும்; அவர் அப்படிச் செய்யாததால் மழைக் காலக் கூட்டத்தொடரை அரசு நடத்தியது. ஆனால் அது அரசமைப்புக்கு எதிரானது என்றும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் செல்லாது என்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவித்தார்.

அதையடுத்து, பேரவைக் கூட்டத்தொடரை இடையில் நிறுத்திய பஞ்சாப் அரசாங்கம், உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.

வழக்கை விசாரித்த தலைமைநீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ஆளுநரின் நிலைப்பாட்டைக் கடுமையாகச் சாடியது.

“மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட பேரவையை ஒத்திவைப்பது, முடித்துவைப்பது என்பது போவைத் தலைவரின் முடிவுக்கு உட்பட்டது. கூட்டத்தொடர் செல்லுமா, செல்லாதா என ஆளுநரால் கேள்வி எழுப்பவே முடியாது. இது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல். இதன் மூலம் நெருப்போடு விளையாடுகிறீர்கள். பஞ்சாப் பேரவையில் ஜூன் 19, 20-ஆம் தேதிகளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் அரசியலமைப்புச் சட்டத்தின்படி செல்லும். ஆகையால், அந்த மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவு எடுக்க வேண்டியது கட்டாயம். மேலும், பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை காலவரையின்றி ஆளுநர் கிடப்பில் போட முடி யாது.” என்று கூறிய நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்தனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com