பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆளுநரிடம் விலகல் கடிதம் அளித்தார்.
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆளுநரிடம் விலகல் கடிதம் அளித்தார்.

பதவிவிலகினார் நிதிஷ்குமார் - பீகார் இந்தியா கூட்டணியில் ஓட்டை!

பீகார் மாநில கூட்டணிஆட்சியின் முதலமைச்சர் நிதிஷ்குமார், இன்று முற்பகல் 11 மணியளவில் அம்மாநில ஆளுநர் இராஜேந்திர அர்லேக்கரிடம் விலகல் கடிதத்தை அளித்தார். ஆளுநரும் அதை ஏற்றுக்கொண்டது உறுதியாகியுள்ளது. 

பாட்னாவில் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ், “ இராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடனான மகா கூட்டணியில் ஏற்பட்ட குழப்பங்களைத் தீர்க்க முயற்சி செய்தும் அது முடியவில்லை. அரசியல் சூழ்நிலை காரணமாக மகா கூட்டணி முறிந்துவிட்டது. புதிய கூட்டணியை அமைப்பேன். ”என்று கூறினார். 

முன்னதாக, லாலுவின் ஆர்ஜேடி கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த நிதிஷ் கட்சி தொடர்ச்சியாக கூட்டணி பிரச்னைகளை எதிர்கொண்டபடியே இருந்தது. இந்தியா கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலை ஒன்றாக எதிர்கொள்ளலாம் என இருந்த நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையே சுமுகமான நிலை உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கேவின் வலியுறுத்தலுக்குப் பிறகும், நிதிஷ்குமார் தன் முடிவிலிருந்து பின்வாங்கவில்லை.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com