மோடி அமைச்சரவை
மோடி அமைச்சரவை

மத்திய அமைச்சரவை: யார்யாருக்கு என்னென்ன துறைகள்?

பிரதமர் மோடி தலைமையிலான மூன்றாவது புதிய அமைச்சரவை தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

அமைச்சர்கள், அவர்களின் துறைகள் விவரம்:

 • பிரதமர் மோடி - பணியாளர் நலன், ஓய்வூதியம், அணுசக்தி, அறிவியல்

 • இராஜ்நாத்சிங் - பாதுகாப்பு

 • அமித் ஷா - உள்துறை + கூட்டுறவு

 • நிதின் கட்கரி - சாலைப் போக்குவரத்து +ரசாயனம், உரங்கள்

 • ஜே.பி. நட்டா – சுகாதாரம்

 • சிவராஜ் சிங் சவுகான் – விவசாயம், ஊரக வளர்ச்சி

 • நிர்மலா சீதாராமன் - நிதி

 • ஜெய்சங்கர் - வெளியுறவு

 • மனோகர் லால் கட்டர் – மின்சாரம், நகர்ப்புற வளர்ச்சி

 • எச்.டி. குமாரசாமி - கனரகத் தொழில்கள், இரும்புத் துறை

 • பியூஸ் கோயல் - வர்த்தகம்- தொழில்

 • தர்மேந்திர பிரதான் - கல்வி

 • ஜிதன்ராம் மாஞ்சி - சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள்

 • இராஜீவ் ரஞ்சன் சிங் என்ற லலான் சிங் - பஞ்சாயத்து, மீன்வளம், கால்நடை

 • சர்பானந்த சோனாவால் - துறைமுகம் - கப்பல் போக்குவரத்து

 • வீரேந்திர குமார் - சமூகநீதி அதிகாரம் அளித்தல்

 • ராம்மோகன் நாயுடு - விமானப் போக்குவரத்து

 • பிரகலாத் ஜோஷி - உணவுத்துறை, நுகர்வோர் விவகாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி

 • ஹர்தீப் சிங் பூரி - பெட்ரோலியம்

 • ஜூவல் ஓரம் - பழங்குடியினர் விவகாரம்

 • கிரிராஜ்சிங் - ஜவுளி

 • ஜோதிராதித்ய சிந்தியா - தொலைத்தொடர்பு, வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாடு

 • பூபேந்திர யாதவ் - சுற்றுச்சூழல், வனம்

 • கஜேந்திர சிங் ஷெகாவத் - கலாச்சாரம், சுற்றுலா

 • அன்னபூர்ணாதேவி - மகளிர், குழந்தைகள் நலன்

 • கிர்ரண் ராஜூ -நாடாளுமன்ற விவகாரம், சிறுபான்மை விவகாரம்

 • ஹர்தீப் சிங் பூரி - பெட்ரோலியம், மின்சாரம்

 • மன்சுவிக் மாண்டவியா - தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர்நலன், விளையாட்டு

 • கிஷண் ரெட்டி - நிலக்கரி, சுரங்கம்

 • சிராக் பாஸ்வான் - உணவுப் பதப்படுத்துதல்

 • சி. ஆர். பாட்டீல் - நீர்வளம்

இணையமைச்சர் (தனிப்பொறுப்பு)

இராவ் இந்தர்ஜித் சிங் - புள்ளியியல், திட்டங்கள் செயலாக்கத் துறை

ஜிதேந்திர சிங் - அறிவியல் தொழில்நுட்பம், பிரதமர் அலுவலகம், புவி அறிவியல்

அர்ஜூன் ராம் மேக்வால் - சட்டம், நீதி

ஜாதவ் பிரதாப் ராவ் கன்பத்ராவ் - ஆயுஷ் மருத்துவம்

ஜெயந்த் சவுத்ரி - திறன் மேம்பாடு, தொழில்முனைவோர்

எல்.முருகன்

இந்த ஐந்து தனிப் பொறுப்பு இணையமைச்சர்களைத் தவிர, மற்ற இணையமைச்சர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எல். முருகனுக்கு கடந்த அமைச்சரவையில் வழங்கப்பட்டிருந்த தகவல் ஒளிபரப்புத்துறை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், நாடாளுமன்ற விவகாரத் துறையிலும் அவர் இணையமைச்சராக பதவி வகிப்பார்.

சுரேஷ்கோபி

கேரளத்தைச் சேர்ந்த இணையமைச்சர் சுரேஷ் கோபி, பெட்ரோலியம்- இயற்கை வாயு, சுற்றுலா ஆகிய துறைகளில் பதவி வழங்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com