மம்தா கட்சியுடன் காங்கிரஸ் பேசிவருகிறது - இராகுல் தகவல்

மம்தா கட்சியுடன் காங்கிரஸ் பேசிவருகிறது - இராகுல் தகவல்
Published on

மேற்குவங்க மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது என இராகுல்காந்தி தெரிவித்துள்ளது. 

அந்த மாநிலத்தில் தன் இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தின் இரண்டாவது நாள் நிகழ்வில், அவர் கட்சி ஊடக அணியினருடன் நேற்று கலந்துரையாடினார்.  அப்போது, திரிணமூல் காங்கிரஸ் கட்சி தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. 

அவர்களுக்கு பதில்கூறிய இராகுல், திரிணமூல் காங்கிரஸ் கட்சியோ காங்கிரஸ் கட்சியோ கூட்டணியிலிருந்து விலகிவிடவில்லை என்றும் கூட்டணி நீடிக்கிறது என்றும் இரண்டு தரப்பினரும் பேசிவருவதாகவும் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என்றும் கூறியுள்ளார். 

முன்னதாக, இராகுலின் பயணம் மேற்குவங்கத்துக்கு உள்ளே செல்லும்முன் மம்தாவிடம் மரியாதை நிமித்தமாகத் தெரிவிக்கவில்லை என்றும் அவரைச் சந்திக்கவில்லை என்றும் திரிணமூல் கட்சித் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையும் தாமதம் ஆகிவிட்டதாகவும் மம்தாவே தெரிவித்திருந்தார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com