பா.ஜ.க.வினர் தங்கள் சமூக ஊடகப் பெயர்களில் மோடியின் குடும்பம் என சேர்த்துப் போட்டிருப்பதை நீக்கிவிடுமாறு அவர் திடீரெனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேர்தலை முன்னிட்டு பிரச்சாரம் தொடங்குவதற்கு முன்னர் அனைத்து மாநில பா.ஜ.க. நிர்வாகிகளும் திடீரென தங்கள் பெயருடன் மோடியின் குடும்பம் எனும் பொருளில் அவரவர் மொழியிலும் ஆங்கிலத்திலும் சமூக ஊடகப் பக்கங்களில் பெயரை மாற்றிக்கொண்டனர். இன்றுவரை அதுவே தொடர்ந்துவந்த நிலையில், மாலையில் பிரதமர் மோடியே அவரின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
அதில், இதுவரை மோடியின் குடும்பம் எனக் குறிப்பிட்டதன் மூலம் நாடு முழுவதும் மக்கள் தன் மீது வைத்த பாசத்தை உணர்ந்துகொண்டதாகவும் அதன் மூலம் தான் வலிமை பெற்றதாகவும் இப்போது தேர்தல் முடிவில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மையை அளித்துள்ளனர் என்றும் எனவே சமூக ஊடகப் பக்கங்களில் மோடியின் குடும்பம் எனக் குறிப்பிட்டவர்கள் அதை நீக்கிவிட வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.