செத்தும் தேர்தலில் ஜெயித்த பெண்! உபி அதிசயம்!

செத்தும் தேர்தலில் ஜெயித்த பெண்! உபி அதிசயம்!

உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஹசன்பூர் நகராட்சியில் ஆஷியா பீ என்ற 25 வயதுப் பெண் ஒருவர் வார்டு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதில் என்ன அதிசயம் என்கிறீர்களா?

ஆஷியா பீ வாக்குப் பதிவு நடப்பதற்கு சில நாட்கள் முன்னதாகவே உடல் நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்துவிட்டார். இருந்தாலும் அவர் போட்டியிட்ட வார்டு மக்கள் அவருக்கே வாக்கு செலுத்திஉள்ளனர்.

இதுவே அவர் போட்டியிடும் முதல் தேர்தல். ஊர்மக்கள் அவர் மீது அன்பு செலுத்தியதற்கு அடையாளமாக அவருக்கே வாக்கு செலுத்தினார் என்று ஆஷியாவின் கணவர் கூறி உள்ளார்.

ஆஷியா போட்டியிட்ட வார்டில் சுமார் 2000 வாக்காளர்கள் உள்ளனர். ஆஷியாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவருக்கு வாக்களித்ததாக அப்பகுதி  மக்கள் கூறினர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com