லால்ரொசாங்கா மிஜோ தேசிய முன்னணி எம்.பி.
லால்ரொசாங்கா மிஜோ தேசிய முன்னணி எம்.பி.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு பா.ஜ.க. கூட்டணி கட்சி ஆதரவு

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிப்போம் என பா.ஜ.க. கூட்டணிக் கட்சியான மிசோ தேசிய முன்னணி அறிவித்துள்ளது.

பா.ஜ.க. தலைமையிலான மத்திய கூட்டணியிலும் வடகிழக்கில் வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணியிலும், மிஜோ தேசிய முன்னணி கட்சி இடம்பெற்றுள்ளது. மணிப்பூரில் பா.ஜ.க. அணியின் சார்பில் இக்கட்சியின் தலைமையில் ஆட்சி நடைபெற்றுவருகிறது.

மிசோ தேசிய முன்னணியின் மக்களவை உறுப்பினர் லால்ரொசாங்கா இன்று ஊடகங்களிடம் பேசுகையில், தான் அரசுக்கு எதிராக வாக்களிக்கப் போவதாகத் தெரிவித்தார்.

தங்கள் பக்கத்து மாநிலத்தில் இன வன்முறையைக் கட்டுப்படுத்துவதில் மைய அரசு தோல்வி அடைந்ததற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“ அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். இது காங்கிரசுக்கு ஆதரவோ பாஜகவுக்கு எதிரானதோ என்று அர்த்தம் இல்லை. மணிப்பூரில் அரசாங்கங்களின் குறிப்பாக மாநில அரசின் தோல்விகளை எதிர்த்தும், எங்களின் பெரும் துயரத்தை வெளிப்படுத்தவும் இந்த முடிவை எடுத்திருக்கிறோம்.” என்றும் லால்ரொசாங்கா விளக்கம் அளித்தார்.

மணிப்பூரையே நாசம் பண்ணியிருக்கும் வன்முறையில் பாதிக்கப்பட்டுள்ள ஜோ இனக்குழுவினரின் துயரத்தால் மிஜோ தேசிய முன்னணி மிகவும் காயப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். 

முன்னதாக, இதுகுறித்து தங்கள் கட்சியின் தலைவரும் மிசோராம் முதலமைச்சருமான சொரம்தங்காவுடனும் மற்ற தலைவர்களுடனும் கலந்துபேசியதாகவும் லால்சொராங்கா கூறினார்.

இந்தக் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் வான்லால்வேனா பிடிஐ செய்தி முகமைக்குப் பேசுகையில், பிரச்னையைக் கையாண்டதில் அரசின் செயல்பாட்டுக்கு எதிராக தன்னுடைய குரலை ஒலித்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com