சீதாராம் யெச்சூரி
சீதாராம் யெச்சூரி

வீட்டில் ரெய்டா? சீதாராம் யெச்சூரி விளக்கம்!

நியூஸ் க்ளிக் என்ற செய்தி நிறுவனம் தொடர்புடைய முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் டெல்லி காவல்துறையினர் இன்று தேடுதல் சோதனையில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

அமெரிக்க மில்லியனர் நெவில் ராய் சிங்கத் என்பவர் பணம் கொடுத்ததன் பேரில் நியூஸ் க்ளிக் சீன ஆதரவு பிரச்சாரத்தை செய்ததாக புகார் வந்ததாகவும், அதன்படி இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும் தில்லி காவல்துறை தெரிவித்தது.

நியூஸ் கிளிக் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நியூஸ் கிளிக் தொடர்புடைய இடங்கள், அதன் பத்திரிகையாளர்கள், ஊழியர்களின் இல்லங்களில் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

யெச்சூரியின் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனை குறித்து அவர் விளக்கம் அளித்தார். அப்போது, “என்னுடன் வசிக்கும் தோழர் ஒருவர், அவரது மகன் நியூஸ் கிளிக்கில் வேலை செய்வதால் போலீசார் எனது வீட்டிற்கு வந்தனர். அவரின் செல்போனையும் லேப்டாப்பையும் எடுத்துச் சென்றுள்ளனர். சுதந்திர ஊடகத்தை ஒடுக்கும் பாஜக அரசின் முயற்சிகளில் இதுவும் ஒன்று” என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com