சி.வி. ஆனந்தா போஸ்
சி.வி. ஆனந்தா போஸ்

பாலியல் புகாருக்கு உள்ளான ஆளுநர்... போலீசுக்குத் தடை!

மேற்குவங்க ஆளுநர் சி.வி. ஆனந்தா போஸ் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ஆளுநர் மாளிக்கைக்குள் நுழைவதற்கு அம்மாநில காவல் துறைக்கும் நிதியமைச்சருக்கும் ஆளுநர் தடைவிதித்துள்ளார்.

மேற்கு வங்க மாநில ஆளுநர் ஆனந்தா போஸ், ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் குற்றஞ்சாட்டினர். கொல்கத்தா காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஆளுநர் மீது புகார் கொடுத்துள்ளதை மேற்கோள் காட்டி அவர்கள் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இது மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, திரிணமூல் காங்கிரஸ் கட்சி எக்ஸ் சமூக வலைதளத்தில், “ஆளுநர் மாளிகையில் இருந்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வருகின்றன. பாதிக்கப்பட்ட பெண் தான் மட்டுமல்லாது தன்னைப்போல் நிறைய பெண்கள் பாதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைப்பதை பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உறுதி செய்ய வேண்டும். அவர்கள் உண்மையிலேயே பெண் சக்தியை நம்பினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று பதிவிட்டுள்ளது.

இருப்பினும் மேற்குவங்க ஆளுநர் சிவி ஆனந்தா போஸ் இந்தக் குற்றசாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர், “உண்மை வெல்லும். இதுபோன்ற கட்டமைக்கப்பட்ட புனைவுகளால் என்னை அடக்கிவிட முடியாது. என் மீது களங்கம் சுமத்துவதன் மூலம் யாரேனும் தேர்தல் ஆதாயம் அடைய விரும்பினால் அவர்களுக்கு எனது ஆசிர்வாதங்கள். ஆனால் நான் ஊழல், வன்முறைக்கு எதிர்த்து செயல்படுவதை யாரும் தடுக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஆளுநர் மாளிகைக்குள் நுழைவதற்கு மேற்கு வங்க மாநில காவல் துறைக்கும், நிதி அமைச்சருக்கும் தடைவிதித்துள்ளார் ஆளுநர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com