பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்!

பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்!
Published on

கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் வீணா அமலாக்கத் துறையின் வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளார்.

ஆம்ஆத்மி, டிஆர்எஸ், பல வட மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்களைத் தொடர்ந்து கேரளத்தை ஆண்ட இடது முன்னணி அரசின் முதலமைச்சர் பினராயி விஜயன் மீதும் அமலாக்கத் துறை தன் நடவடிக்கையை ஏவியுள்ளது.  

கடந்த 29-ம் தேதி பினராயி விஜயன், வீணா தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. 

விஜயனின் மகள் வீணாவிற்கும் அரசின் சிஎம்ஆர்எல் நிறுவனத்துக்கும் இடையில் கொடுக்கல்வாங்கல் சட்டவிரோதமாக நடந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. 

இதில், முறைகேடாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் அதற்குரிய சட்டத்தின்படி வழக்கு பதியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வரும் வெள்ளியன்று நேரில் வந்து விளக்கம் அளிக்கவேண்டும் என அமலாக்கத் துறை வீணாவுக்கு தெரிவித்துள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com