அமைச்சர் அன்பில் மகேஸ்
அமைச்சர் அன்பில் மகேஸ்

நலமுடன் வீடு திரும்பினார் அமைச்சர் அன்பில் மகேஷ்!

பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வீடு திரும்பினார்.

அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கிருஷ்ணகிரிக்கு காரில் சென்று கொண்டிருந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, தருமபுரியை அடுத்த காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

அவருக்கு ரத்த அழுத்தம், இசிஜி உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. அஜீரணக் கோளாறு, வாயுத் தொல்லை இருந்ததாகவும், அதற்கான முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர், உயா் மருத்துவப் பரிசோதனைக்காக பெங்களூரில் உள்ள நாராயணா இருதாலயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் உடல் நிலை சீராக உள்ளது என்று பெங்களூரு மருத்துவமனை விளக்கம் அளித்தது. அமைச்சர் அன்பில் மகேஷிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார்.

இந்நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் முழுமையாக குணமடைந்து தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு மருத்துவமனையில் இருந்து கார் மூலம் சென்னை புறப்பட்டுள்ளார். இருப்பினும் அவர் சில நாட்கள் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com