'ஆர் டி எக்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

'ஆர் டி எக்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களான ஷேன் நிகம், நீரஜ் மாதவ் மற்றும் ஆண்டனி வர்கீஸ் நாயகர்களாக நடித்திருக்கும் 'ஆர் டி எக்ஸ்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'ஆர் டி எக்ஸ்'. இதில் ஷேன் நிகம், நீரஜ் மாதவ், ஆண்டனி வர்கீஸ், பாபு ஆண்டனி, லால், ஐமா ரோஸ்மி செபாஸ்டியன், பைஜு சந்தோஷ், மகிமா நம்பியார், மாலா பார்வதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் கதையை இயக்குநர் நஹாஸ் ஹிதாயத், சபாஷ் ரஷீத் மற்றும் ஆகாஷ் சுகுமாரன் ஆகியோர் இணைந்து எழுதி இருக்கிறார்கள். அலெக்ஸ் ஜே. புலிக்கல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார்.

இந்த படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com