கண்ணீருடன் வெளியேறிய ரொனால்டோ… இப்படி ஆயிடுச்சே வருத்தத்தில் ரசிகர்கள்!

ரொனால்டோ
ரொனால்டோ
Published on

காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆட்டத்தில் அண்டை நாடுகளான ஸ்பெயினும் போர்ச்சுகலும் நேற்று இரவு மோதின. போர்ச்சுகல் அணி கடுமையாகப் போராடி ஸ்பெயினை கோல் போடாமல் தடுத்தது. ஐரோப்பிய சாம்பியன் அணியான ஸ்பெயின் கடைசி சேரத்தில் பதிலி ஆட்டக்காரராக களமிறங்கிய ஸ்பெயின் வீரர் மைகெல் மெரினோ, ஒரு கோல் அடித்து, வெற்றியை ஈட்டினார்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து போர்ச்சுகல் வெளியேறியது. தன் கடைசி உலகக்கோப்பை ஆட்டத்தில் இருந்து தலைகவிழ்ந்து வெளியேறினார் போர்ச்சுகல் அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

அவர் கண்ணீருடன் வெளியேறிய காட்சி ரசிகர்களால் வருத்தத்துடன் பார்க்கப்பட்டு வருகிறது. சமகாலத்தின் தலைசிறந்த வீரரான ரொனால்டோ, உலகக் கோப்பையை ஒருமுறை கூட வெல்லமுடியாமல் போனது துரதிருஷ்டமே

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com