பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை
பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை

அண்ணாமலை மீது வழக்குப்பதிய அனுமதியா? அப்டிலாம் இல்லை!- ஆளுநர்

பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்குப் பதிய ஆளுநர்ஆர்.என். இரவி அனுமதி அளித்ததாக தி.மு.க. சார்பு ஊடகங்களில் செய்தி வெளியானது.

குறிப்பிட்ட சில வழக்குகளில் அரசின் அனுமதியை காவல்துறை கோரும் என்றும் சில அரசாணைகளைப் போல அது பெயரளவில் ஆளுநர் அனுமதியாகவே ஆவணங்களில் இருக்கும் என்றும் ஆட்சியியல் வல்லுநர்கள் விளக்கமளித்தனர். 

இதனிடையே இதுகுறித்து ஆளுநர் மாளிகையின் மக்கள்தொடர்பு அலுவலகத்தினர் ட்விட்டரில் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், “ தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கில் வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகைக்கு கடந்த இரண்டு நாள்களாக பொதுமக்களிடம் இருந்து பரபரப்பாக கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல் வழக்கு குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை எந்த ஒரு தகவலும் அறிந்திருக்கவில்லை. மேலும், அது தொடர்பான அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை தெரிவிக்கப்படுகிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com