அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

அ.தி.மு.க.வை அடுத்து தி.மு.க.விலும் மா.செ. கூட்டம்- 26ஆம் தேதி நடைபெறுகிறது!

அ.தி.மு.க. மாவட்டச்செயலாளர் கூட்டம் சென்னையில் இன்று அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணியில்லாமல் தனித்துப் போட்டியிடுவதால், தேர்தலை எதிர்கொள்வது பற்றிய வியூகங்கள் இதில் ஆலோசிக்கப்பட்டன.

ஏற்கெனவே, மண்டலவாரியாக வாக்குச்சாவடி பொறுப்பாளர் பாசறைக் கூட்டங்களை நடத்திவரும் தி.மு.க. இதே வாரத்தில் வரும் 26ஆம் தேதி மாவட்டச்செயலாளர் கூட்டத்தை நடத்துகிறது.

தி.மு.க. பொதுச்செயலர்துரைமுருகன் இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில், ஜெகத்ரட்சகன் தொடர்புடைய சென்னை, தியாகராயர் நகர் அக்கார்டு நட்சத்திர விடுதியில் 26ஆம்தேதி காலை 10 மணிக்கு இக்கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். 

சேலத்தில் நடைபெறவுள்ள இளைஞர் அணி மாநாடு பற்றியும் வாக்குச்சாவடி மட்டப் பணிகள் பற்றியும் விவாதிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com