காவல்துறை விசாரணை மீது குறைகூறி ஆளுநர் மாளிகை அறிக்கை!
பெட்ரோல் பாட்டில் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் காவல்துறையின் செயல்பாடு குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் பகிரங்கமாக அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாட்டில் வீச்சு தொடர்பாக சென்னை காவல்துறை அதிகாரி பிரேம் ஆனந்த் சின்கா நேற்று ஊடகத்தினரிடம் பேசியபோது தெரிவித்த தகவல்களுக்கும், முதல் தகவல் அறிக்கையில் பதிவாகியுள்ள தகவல்களுக்கும் சற்று மாறுபாடு உள்ளது. இந்த நிலையில் இன்று ஆளுநர் மாளிகையின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசின் செயல்பாட்டை பகிரங்கமாக குறைகூறப்பட்டுள்ளது.
“ ராஜ் பவனின் தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை. தண்ணிலையாகப் பதிவுசெய்யப்பட்ட புகார் தாக்குதலை சாதாரண நாசகாரச் செயலாக நீர்த்துப்போகச் செய்துவிட்டது அவசர கதியில் கைது மேற்கொள்ளப்பட்டு மேஜிஸ்திரேட்டை நள்ளிரவில் எழுப்பி குற்றம் சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால், பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக்கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்படுகிறது.” என்று ஆளுநர் மாளிகையின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.