செய்தியாளர் சந்திப்பில் சீமான்
செய்தியாளர் சந்திப்பில் சீமான்

இளையராஜா – வைரமுத்து சர்ச்சை: சீமான் நிலைப்பாடு என்ன?

இசை, பாடல் வரிகள் என இரண்டும் முக்கியம்தான் என்று சீமான் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை நுங்கம்பாக்கம் லீ மேஜிக் லேன்டன் திரையரங்கில் இயக்குநர் அமீர் நடித்துள்ள ‘உயிர் தமிழுக்கு’ திரைப்படத்தைப் பார்த்தார். பின்னர் அமீர், மற்றும் சீமான் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.Follow செய்யுங்கள்

அப்போது பாடல் வரிகள் மற்றும் இசை குறித்த இளையராஜா, வைரமுத்து சர்ச்சை குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சீமன் அளித்த பதில்:

பாடல் வரிகளும், இசையும் இரண்டும் முக்கியம் தான். ஒன்றை ஒன்று ஏன் பிரிக்க வேண்டும். இரண்டு அப்பாவுக்கு இடையில் உள்ள பிரச்னையில் பிள்ளைகளை உள்ளே இழுத்துவிடக் கூடாது. இளையராஜா, வைரமுத்து பிரச்சனை தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை தான். ஒரு முறை படத்தை வாங்கி விட்டால் வாழ்நாள் முழுக்க உரிமத்தை வைத்துக்கொள்வது சரியல்ல. நியாயமான உரிமையை தான் இளையராஜா கேட்கிறார், மற்றவர்களுக்கு உரிமை கொடுக்க வேண்டாம் என அவர் சொல்லவில்லை. அவருக்கான உரிமையை தான் அவர் கேட்கிறார். மற்ற மாநிலங்களில் இல்லாத அளவிற்கு திரை கவர்ச்சி நம் மாநிலத்தில் உள்ளது. மக்கள் வைக்கும் நம்பிக்கையை காப்பாற்றி விட்டால் அரசியலுக்கு வரும் ரீல் ஹீரோ ரியல் ஹீரோ ஆகிவிடுவார்.

10 ஆண்டுகளுக்கு முன்பு சீமான் மாற்றத்தைக் கொண்டு வந்து விட்டார். அதிகாரத்தை தான் பிடிக்க முடியவில்லை. ஆனால் மாற்றம் தொடங்கி உள்ளது. நீட் தேர்வு போலி மருத்துவர்களை தான் உருவாக்குகிறது. இந்தியாவில் தரமான மருத்துவர்களை உருவாக்க அமெரிக்கா நிறுவனம் எதற்கு? வட இந்தியாவில் யாருக்கும் காதணி, மூக்குத்தி,உள்ளாடை அகற்ற சொல்வதில்லை. தமிழ்நாட்டில் தான் இது போன்று செய்கிறார்கள்.

பிரதமர் மோடியின் பிரச்சாரத்தை நான் கேட்பதே இல்லை. அவர் பேசுவது எனக்கு புரிவதில்லை. அதனால் நான் பார்ப்பதில்லை இவ்வாறு சீமான் கூறினார்.

இதனை அடுத்து, ஜூன் 4 எப்படி இருக்கும் என்கிற கேள்விக்கு பதில் அளித்த சீமான், இவ்வளவு வெயில் இருக்க கூடாது என பதிலளித்தார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com