தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டில் கொடியேற்றிய கனிமொழி!
தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டில் கொடியேற்றிய கனிமொழி!

கனிமொழி கொடியேற்ற... தி.மு.க. இளைஞரணி மாநாடு தொடங்கியது!

தி.மு.க. இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலம், பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று காலை தொடங்கியது. 

அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான கனிமொழி கொடியேற்றினார்.

கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு உட்பட்ட முன்னணித் தலைவர்கள் முன்னிலை வகித்தனர். 

பின்னர், இளைஞணியின் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தீர்மானங்களை வாசித்தார். 

அதைத் தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் பேச்சாளர்கள் உரையாற்றிவருகின்றனர். 

logo
Andhimazhai
www.andhimazhai.com