கமல்ஹாசனுடன் அமைச்சர் நேரு, ஆ.இராசா சந்திப்பு!

கமல்ஹாசனுடன் அமைச்சர் நேரு, ஆ.இராசா
கமல்ஹாசனுடன் அமைச்சர் நேரு, ஆ.இராசா
Published on

மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை, தி.மு.க. முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என். நேருவும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. இராசாவும் இன்று சந்தித்தனர். 

சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் அலுவலகத்தில் இன்று காலையில் இச்சந்திப்பு நடைபெற்றது. 

அப்போது, கமல்ஹாசனின் மாமா சீனிவாசன் அவர்களின் மறைவுக்கு இருவரும் ஆறுதல் கூறினர்.

அத்துடன், நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு முழுக்க பயணம்செய்து தி.மு.க. கூட்டணிக்குப் பரப்புரை செய்ததற்காக அவருக்கு நன்றியும் தெரிவித்துக்கொண்டனர்.

மக்கள் நீதி மையம் கட்சியின் ஊடக மையம் இத்தகவலைத் தெரிவித்துள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com