சட்டப்பேரவை இருக்கையில் தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக அமர்ந்த பெண் எனும் பெருமையை சத்யபாமா பெற்றுள்ளார் என்று பாராட்டுகள் குவிந்துள்ளன.
சட்டப்பேரவையின் தலைவர், துணைத்தலைவர் இல்லாதபோது, அவருக்குப் பதிலாக மாற்றுத்தலைவர்கள் அவையை நடத்துவது சட்டமன்ற நடப்பு. அதைப்போல த.வெ.க.வின் உறுப்பினர் திருப்பூர் வடக்குத் தொகுதி சத்யபாமா இன்று அவையை வழிநடத்தினார்.
அவருக்கு தி.மு.க.வின் தங்கம் தென்னரசு, லேடி வெலிங்டன் இருக்கையில் முதல் முறையாக அமர்ந்து அவையை நடத்தியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக உணர்ச்சிமயமாகக் குறிப்பிட்டார். மற்ற பல உறுப்பினர்களும் சத்யபாமாவுக்குப் பாராட்டு தெரிவித்தனர்.
பின்னர், அவைக்கு வந்த பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரும் அவரை வாழ்த்தினார்.
அமைச்சர் செங்கோட்டையனின் ஆதரவாளரான இவர், அ.தி.மு.க.வின் திருப்பூர் மக்களவைத் தொகுதி எம்.பி.யாகவும் இருந்துள்ளார். குருவைத் தொடர்ந்து அவரும் த.வெ.க.வில் இணைந்தார். இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.