சஸ்பெண்ட் எம்.பி.கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்!

சஸ்பெண்ட் எம்.பி.கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்!

நாடாளுமன்றத்தில் இருபதாண்டுகளுக்கு முன்னர் தாக்குதல் நடத்தப்பட்டதன் நினைவு நாள் கடந்த 13ஆம்தேதி கடைப்பிடிக்கப்பட்டது. அதே நாளில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் பார்வையாளர்களாக வந்த இருவர் உறுப்பினர்கள் இருக்கைப் பகுதிக்குள் குதித்ததுடன் கோஷமிட்டனர். அவைக்கு வெளியிலும் இருவர் புகைக் குண்டுகளை வீசி முழக்கம் எழுப்பினர். இவர்களுக்கு ஒத்தாசை செய்ததாக இருவர் என இதுவரை ஆறு பேர் பிடிபட்டுள்ளனர். இவர்கள் மீது உபா சட்டப்படி வழக்கு பதியப்பட்டுள்ளது. 

இந்தப் பாதுகாப்பு அத்துமீறலைக் கண்டித்து எதிர்க்கட்சியினர் நேற்று கடும் விவாதத்தில் ஈடுபட்டனர். அப்படியானவர்களை 14 பேரை மக்களவையிலும் ஒருவரை மாநிலங்களவையிலும் இடைநீக்கம் செய்ய அவைத்தலைவர்கள் உத்தரவிட்டனர். 

அவர்களில்தமிழ்நாட்டின் கனிமொழி, மாணிக்கம் தாகூர், பி.ஆர்.நடராஜன், சுப்பராயன், சு.வெங்கடேசன் ஆகியோரும் அடக்கம். 

வரும் 22ஆம்தேதிவரை நடைபெறும் இக்கூட்டத்தொடர் முழுவதும் இவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்னர் இன்று 15 எம்.பி.களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இவர்களை அவையில் அனுமதிக்கக் கோரி இரண்டு அவைகளும் அமளியால் ஒத்திவைக்கப்பட்டன. 

logo
Andhimazhai
www.andhimazhai.com