கார் பந்தயம்
கார் பந்தயம்

சென்னை கார் பந்தயம் காலவரையின்றி தள்ளிவைப்பு!

சென்னை நகருக்குள் நடைபெறுவதாக இருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் வரும் 14ஆம் தேதி நடைபெறுவதாக கடைசியாக அறிவிக்கப்பட்டது. சில நாள்களுக்கு முன்னர் இதுதொடர்பான வழக்கில் தீர்ப்பு வரவிருந்த நிலையில், புயல் மழை காரணமாக அது தற்காலிகமாக தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், காலவரையின்றி கார் பந்தயம் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சற்று முன்னர் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ மிக்ஜாம் புயல் பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளதன் விளைவாக, சென்னையில் நடைபெற இருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் கால வரையறையின்றி எந்தத் தேதியும் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com