வந்தே பாரத் ரயில்
வந்தே பாரத் ரயில்

சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் நேரம் மாற்றம்!

சென்னை சென்ட்ரல் - கோவை இடையிலான வந்தே பாரத் ரயில்வண்டியின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,

”சென்னை சென்ட்ரலுக்கும் கோவைக்கும் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் தொடர்வண்டியின் நேரம் சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய நிலையங்களில் மட்டும், வரும் 23ஆம் தேதி முதல் மாற்றியமைக்கப் படுகிறது. இதன்படி, சேலம் நிலையத்துக்கு மாலை 5.58 மணிக்குப் பதிலாக முன்கூட்டியே 5.48 மணிக்கு வண்டி சென்றடையும்.” என்றும், 

”ஈரோட்டுக்கு மாலை 6.47 மணிக்குப் பதிலாக முன்கூட்டியே 6.37 மணிக்கும், திருப்பூர் நிலையத்துக்கு இரவு 7.25 மணிக்குப் பதிலாக 7.18 மணிக்கும் முன்கூட்டியே சென்றடையும்.” என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல, திருப்பதியிலிருந்து மதியம் 12.35 மணிக்குப் புறப்பட்டு இரவு 8.15 மணிக்கு விழுப்புரத்தை அடையும் விரைவுத் தொடர்வண்டி (எண்.16853) காட்பாடியில், மாலை 4.25 மணிக்குப் பதிலாக 5 நிமிடம் பின்னால் 4.30 மணிக்கு வரும் என்றும் ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு நிலையத்திலும் 2 நிமிடம் மட்டுமே வண்டி நின்றுசெல்லும். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com