அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி

உச்சநீதிமன்றம் விலக்கு - பொன்முடி, விசாலாட்சி சிறைக்குச் செல்லாமல் தப்பினர்!

சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரின் மனைவிக்கு சரணடைவதிலிருந்து உச்சநீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. 

சொத்துக்குவிப்பு குற்றத்துக்காக ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி அண்மையில் அமைச்சர் பதவியிலிருந்து விலகிய பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி மீது வழக்கு தொடுக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து கடந்த மாதம் 21ஆம் தேதியன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. 

குற்ற வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றாலே பதவிவிலக வேண்டிய சூழலில், பொன்முடிக்கும் விசாலாட்சிக்கும் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

அமைச்சர் பதவியிலிருந்து பொன்முடி விலகினார். அவரின் வசமிருந்த உயர்கல்வித் துறை பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் இராஜகண்ணப்பனுக்கு வழங்கப்பட்டது. 

இந்நிலையில், அமைச்சர் பொன்முடி தரப்பில் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ் சந்திர சர்மா, தீர்ப்பின்படி ஒரு மாதத்துக்குள் பொன்முடியும் அவரின் மனைவியும் நீதிமன்றத்தில் வரும் 22ஆம் தேதி சரணடைய வேண்டும் என்பதிலிருந்து விலக்கு அளித்தார்.

இதனால் பொன்முடி, விசாலாட்சி இருவரும் சிறைக்குச் செல்வதிலிருந்து தப்பியுள்ளனர்.

அதிகமான வழக்குரைஞர்கள் பொன்முடிக்காக வாதாடக் குவிந்ததைப் பற்றி நீதிபதி கேள்வி எழுப்பினார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com