தலைமைச்செயலகம்
தலைமைச்செயலகம்

தென்கோடி மாவட்ட வெள்ளம்- வாட்சாப், ட்விட்டரில் உதவி கேட்கலாம்!

தென்கோடி மாவட்டங்களில் பெய்துவரும் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அரசின் உதவி கேட்பதற்காக வாட்சாப் எண் வெளியிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்:

”  திருநெல்வேலி,  தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில்
பெய்து வரும் கனமழை முதல் அதி கனமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் பொதுமக்கள், தங்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் பாதிப்புகள்குறித்த விவரங்களை தமிழ்நாடுஅரசின் “வாட்ஸ்அப்” எண்
மற்றும் “டிவிட்டர்”-ல்பதிவுகளை தெரிவிக்கலாம்

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் பெய்து வரும் கனமழை முதல் அதிகனமழை காரணமாக பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை அரசு பரிவுடன் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.  

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசித்துவரும் பொதுமக்களின் நலன் கருதி, மக்களுக்கு தேவைப்படும் உதவிகள் அனைத்தையும் உடனுக்குடன் வழங்கிட களத்தில் அதிகாரிகள் ஆயத்தமாக உள்ளனர். எனவே  பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள பொது மக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், தேவைப்படும்  நிவாரண உதவிகள், மருத்துவ உதவிகள், மீட்பு நடவடிக்கைகள், முதலான விவரங்களை சமூக வலைதளத்தின் (Social Media) மூலம் தமிழ்நாடு அரசின்  வாட்ஸ்அப்எண் : 8148539914 மற்றும் “டிவிட்டர்” மூலமாக பதிவுகளை தெரிவிக்குமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வாட்ஸ்அப்எண் : 8148539914

டிவிட்டர் : Username - @tn_rescuerelief, @tnsdma

Facebook id : @tnsdma.” என்று அரசுச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com