சத்தியப்பிரதா சாகு
சத்தியப்பிரதா சாகு

தேர்தல் விதிமுறைகள் முடிவுக்கு வந்தன - சத்தியப்பிரதா சாகு அறிவிப்பு

நாடாளுமன்ற மக்களவைத்தேர்தல் முடிவு வெளியானதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்துவிட்டன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாகு, கூடுதல் தலைமைச் செயலாளர்கள், அனைத்து அரசுத் துறைகளின் செயலாளர்கள், அனைத்து மாவட்டதேர்தல் அலுவலர்கள், அனைத்து சட்டமன்றத் தொகுதி தேர்தல் அலுவலர்கள், காவல்துறை தலைமை இயக்குநர், காவல்துறையின் நோக்க அதிகாரி, அனைத்து அமைச்சர்களின் சிறப்பு, மூத்த உதவியாளர்கள் ஆகியோருக்கு இதுகுறித்து இன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். 

நாடாளுமன்ற மக்களவை, ஆந்திரப்பிரதேசம், ஒடிசா, சிக்கிம், அருணாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியானதால், தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாக ரத்துசெய்யப்படுகின்றன என்றும், 

கர்நாடகம், மகாரஷ்டிரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் பட்டதாரி தொகுதிகளுக்கான சட்டமேலவைத் தேர்தல் இன்னும் முடிவடையாததால் அங்கு மட்டும் நடத்தை விதிகள் இன்னும் நீடிக்கின்றன என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாகவும் சத்தியப் பிரதா சாகு அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com