வேளச்சேரி பூங்கா
தமிழ் நாடு
நீதிபதியிடம் தகராறு செய்த நடிகர்!
சென்னை வேளச்சேரி தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் வசித்துவருபவர், திருமால். ஜார்ஜ்டவுன் பகுதி நீதிமன்ற உரிமையியல் நடுவராகப் பணியாற்றுகிறார். இவர் தன் வீட்டருகே உள்ள மாநகராட்சிப் பூங்காவில் நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் ஜெயமணி (69), அவருடைய நண்பர் மாரிமுத்து (79) ஆகியோர் தகராறு செய்ததாகவும் திருமாலை வழிமறித்து அவரை அடிக்க முயன்றதாகவும் கிண்டி காவல்நிலையத்தில் திருமால் புகார் செய்தார். அதன்படி வழக்குப்பதிந்து ஜெயமணி, மாரி முத்து இருவரையும் கைது செய்தனர்.
பின்னர் இருவரும் காவல்நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டனர்.