முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்Office

பல்லடம் கொலைகள்- மற்ற குற்றவாளிகளும் விரைவில் கைது - முதலமைச்சர்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் குடி தொடர்பாக 4 பேர் படுகொலை செய்யப்பட்டனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன்இறந்தவர்களின் குடும்பத்தினருக்குதலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர்; மற்ற குற்றவாளி களையும் விரைவில் கைதுசெய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com