மணல் கடத்தலைப் படம்பிடித்த முன்னாள் படைவீரருக்கு வெட்டு
மணல் கடத்தலைப் படம்பிடித்த முன்னாள் படைவீரருக்கு வெட்டு

மணல் கடத்தல்- முன்னாள் படைவீரரை வெட்டிய கும்பல்

வேலூர் மாவட்டம் பொன்னையாற்றில் அணைக்கட்டு பகுதியில் நேற்று அதிகாலை ஒரு கும்பல் மணல் கடத்தலில் ஈடுபட்டது. தகவல் அறிந்த கொக்கேரி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர் உமாபதி (40), மணல் கடத்தலை வீடியோவாகப் பதிந்தார்.

அவர் வீடியோ எடுப்பதை, எருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கடத்தல் கும்பல் பார்த்துவிட்டது. அதிலிருந்த முனுசாமி (வயது45), அவரின் தம்பி குமரேசன் (40), முனுசாமியின் மகன்கள் சூர்யா (23), பிரகாஷ் (20) நால்வரும், உமாபதியின் செல்போனைப் பறித்தனர். அத்துடன் அவரை கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். படுகாயம் அடைந்த உமாபதி ரத்தம் சொட்டச்சொட்ட உயிர்தப்பி, மேல்பாடி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல்நிலையத்தினர் அவரை வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

வழக்கு பதிந்த காவல்நிலையத்தினர் குமரேசனைக் கைதுசெய்தனர். முனுசாமியையும் அவரின் மகன்களையும் தேடிவருகின்றனர்.

முன்னாள் படைவீரர் மீதான தாக்குதலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com