கே. பாலகிருஷ்ணன்
கே. பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கட்சிக்கும் 2 தொகுதிகள்- தி.மு.க.வுடன் உடன்பாடு!

மக்களவைத் தேர்தலில் தி.மு.க. அணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான உடன்பாடு சற்று முன்னர் கையெழுத்தானது. 

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் இதைச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

பேச்சுவார்த்தையில் தங்கள் தரப்பில் கூடுதல் தொகுதிகளை ஒதுக்குமாறு கேட்டதாகவும், அதற்கு வாய்ப்பில்லை என தி.மு.க. தரப்பில் தெரிவித்துவிட்டதாகவும் அவர் கூறினார். 

எந்தெந்தத் தொகுதிகள் யாருக்கு என்பதைப் பின்னர் பேசித் தீர்மானிக்கலாம் என முடிவுசெய்யப்பட்டுள்ளது என்றும் பாலகிருஷ்ணன் கூறினார். 

கூட்டணியில் எல்லா கட்சிகளோடும் பேசி, கடந்த ஐந்து ஆண்டுகள் உள்ள நிலைமையை ஒட்டி முடிவுசெய்யப்படும் என்றும் அவர் கூறினார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com