பிரதமர் மோடியுடன் அமைச்சர் உதயநிதி சந்திப்பு
பிரதமர் மோடியுடன் அமைச்சர் உதயநிதி சந்திப்பு

மோடியுடன் உதயநிதி சந்திப்பு- கேலோ இந்தியா போட்டிக்கு அழைப்பு!

பிரதமர் நரேந்திர மோடியை இளைஞர் நலந் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதுதில்லியில் இன்று சந்தித்தார். அப்போது, வரும் 19ஆம் தேதி சென்னையில் தொடங்கவுள்ள கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழா அழைப்பிதழை பிரதமரிடம் அவர் வழங்கினார். அகில இந்திய அளவில் இளைஞர்களுக்கான இந்த விளையாட்டுப் போட்டி ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெறும். இந்த ஆண்டு தமிழ்நாட்டில் நடத்த மைய அரசு ஒப்புதல் அளித்தது. ஜனவரி 31ஆம்தேதி இப்போட்டி நிறைவு பெறும். 

logo
Andhimazhai
www.andhimazhai.com