வடக்கு, தெற்கு போலீஸ் ஐ.ஜி.கள் பரஸ்பர மாற்றம்!

மக்களவைத்தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக மாநில அளவில் ஆட்சிப் பணி, காவல் பணி  அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, இன்று இரண்டு காவல்துறை ஐ.ஜி. கள் இருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வடக்கு மண்டல ஐ.ஜி. டாக்டர் என். கண்ணன், தெற்கு மண்டலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.  அவரின் இடத்துக்கு மதுரையை மையமாகக் கொண்டு செயல்படும் தெற்கு மண்டல ஐ.ஜி. நரேந்திரன் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com