தமிழக மீனவர் படகுகள்
தமிழக மீனவர் படகுகள்

19 தமிழக மீனவர்கள் எல்லை மீறியதாக இலங்கையில் கைது!

தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 மீனவர்கள் இலங்கையில் அத்துமீறி நுழைந்ததாகக் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வட இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து நேற்று இரவு இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்று இலங்கை ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் இரண்டு படகுகளுடன் கைதான 13 பேர் இராமேசுவரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்றொரு படகில் இருந்த 6 பேர் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

தமிழக மீனவர்கள் 19 பேரும் இன்று காலையில் காங்கேசன்துறைக்கு கொண்டுவரப்பட்டனர். காலையில் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என்று யாழ்ப்பாண பிரதேச கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com