முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இந்தியா கூட்டணி: டிச.19-இல் நடைபெறும் டெல்லி கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பு!

டெல்லியில் நடைபெறவுள்ள இந்தியா கூட்டணியின் நான்காவது கூட்டத்தில் தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார்.

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், இந்தியா கூட்டணியின் நான்காவது கூட்டம் மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கூட்டணிக் கட்சிகளின் முக்கியத் தலைவர்களான மம்தா பானா்ஜி, மு.க.ஸ்டாலின், நிதீஷ் குமாா், அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, டிசம்பா் 19-ஆம் தேதி டெல்லியில் கூட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்திருந்தார். டெல்லி கூட்டத்தில் தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளாா்.

கோவையில் ‘மக்களுடன் முதல்வா்’ எனும் தமிழக அரசின் புதிய திட்டத்தை திங்கள்கிழமை முதல்வர் தொடங்கி வைக்கவுள்ளார். அவா் அங்கிருந்து டெல்லி சென்று இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் கலந்து கொள்வாா் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com