வெள்ளக்காடான மேற்கு தாம்பரம்
வெள்ளக்காடான மேற்கு தாம்பரம்

மத்திய குழுவிடம் மேற்கு தாம்பரம் பகுதி மக்கள்நல மன்றத்தினர் மனு!

மேற்கு தாம்பரம், வரதராஜபுரத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை ஆய்வுசெய்ய மத்தியக்குழு நேற்று   வரதராஜபுரத்திற்கு வந்தது. இக்குழுவிடம் வரதராஜபுரம் நல மன்ற கூட்டமைப்பின் சார்பில் இப்பகுதியில் வெள்ள பாதிப்பிலிருந்து நிரந்தரமாக தீர்வு காண வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

அதில், ”2015இல் இருந்து தொடர்ந்து இப்பகுதி மக்கள் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்; அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே,  இனிமேல் இந்த பாதிப்புகள் ஏற்படா வண்ணம் நிரந்தர தீர்வு  காண வேண்டும் எனவும், மேலும், அடையாறு ஆற்றின் இரு கரைகளிலும் தடுப்புச் சுவர் அமைப்பதுடன், தடுப்புச் சுவரின் உயரத்தை அதிகரிக்க வேண்டுமெனவும், அதே போல், செம்பரம்பாக்கம் ஏரி தூர்வாரப்படாமல் உள்ளது அதை குறைந்தது நான்கு அடிக்கு தூர் வார வேண்டும் எனவும், வெள்ள பாதிப்பகளை தடுக்க சுற்றுச்சூழல் மற்றும் நீர் மேலாண்மை குழு ஒன்றை மாவட்ட அளவில் அமைத்து அக்குழுவில் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், குடியிருப்போர் நலச் சங்க பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்து உரிய முறையில் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளனர்.

திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. செல்வபெருந்தகையும் இதுகுறித்து பரிந்துரை செய்துள்ளதுடன் மத்திய குழு வந்தபோது அவர்களிடம் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

நல மன்றக் கூட்டமைப்பின் தலைவர் வெ.ராஜசேகரன், ஊராட்சி தலைவர் மு.செல்வமணி உட்பட்ட பலரும் மத்தியக் குழுவிடம் பாதிப்பை எடுத்துக்கூறினர். 

logo
Andhimazhai
www.andhimazhai.com