திமுக-வில் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் பணி தொடக்கம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திமுக-வில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க, அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, இன்று தொடங்கி வரும் ஜூன் 3ம் தேதி வரை "உடன்பிறப்புகளாய் இணைவோம்" என்ற முன்னெடுப்புடன் நடைபெறவுள்ள உறுப்பினர் சேர்க்கையை, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திரு.வி.க., குடியிருப்பில் இன்று தொடங்கி வைத்தார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com