உடைந்த கண்ணாடி ; ஒளிரும் பிம்பங்கள்

இதமாய் பெய்யும் மழை 3

அனுபவ சித்தனின் குறிப்புகள் * கவிதைகள் . * ராஜா சந்திரசேகர்.

“ ஒரு குடம் நிரம்பி இருந்தால் அதனை ’ நிறைகுடம் ‘ என்று பாராட்டும் சிந்தனைப் போக்கைக் கொண்டவர்கள் நாம். ஆனால் ஒரு பாத்திரம் எவ்வளவுக் கெவ்வளவு காலியாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அது பயனுள்ளது “ என்பது ஜென் [இந்திரன்]

“ உங்களது பாத்திரம் / நிரம்பி வழிவது குறித்து / உங்களுக்கு ஆனந்தம்,/ எனது பாத்திரம் / நிரம்பாமல் வழிவது குறித்து / எனக்குப் பேரானந்தம் ” என்ற ராஜா சந்திரசேகரின் வரிகளைப் படித்த போது , அபி , அப்துல் ரகுமான் போன்றோரைத் தொடர்ந்து ‘ ஜென் ‘ எழுதுகிற இவர் ‘ நம்மாளு ‘ என்று கொண்டாடத் தோன்றியது .

ராஜா சந்திரசேகர் திரைத்துறை சார்ந்தவர் ; ஏரிக்காற்று இலக்கியம் வளர்க்கும் வளவனூர்க்காரர். கவிதையின் நுட்பம் புரிந்தவர் .

“ அனுபவ சித்தனின் குறிப்புகள் “ - நூலை ஹைக்கு என்பதா , குறுங்கவிதை என அழைக்கலாமா அல்லது சிந்தனைப் பதிவுகளென்பதா.. கொஞ்சம் சர்ரியலிசம் , கொஞ்சம் தாவோ , கொஞ்சம் ஜென் , கொஞ்சம் கருத்துகள் கூடவே கொஞ்சம் கவிதைகளும் .

“ வெறும் சொல் கவிதையாவதில்லை ; சொல்லுக்கு பின்னால் நிற்கும் அனுபவமே அதை கவிதையாக்குகிறது “ என்பார் கலைவிமர்சகர் கவிஞர் இந்திரன்.

‘ எழுதாத தாளில் /விரிகிறது / வானம் ‘ என அழகான ஹைக்கு வை வாசிக்கையில் வாசகனுக்கு வானம் வசப்படும்.

‘ மணல் வெளியில் / வெயில் பாம்பு /கால் மிதிக்க / நெளியும் நழுவும் ‘ வெயில் பாம்பு - புதுமையான படிமம்.மலைப் பாம்பை / விழுங்கிய எறும்பு / எறும்பாகவே நகர்கிறது ‘ - என்ற வரிகளில் செறிவானக் குறியீடு.

ராஜா சந்திரசேகரின் வெற்றி ரத்தின சுருக்கம்.

ஆயிரம் வார்த்தைகளை விடவும் அமைதியான மவுனம் சொல்லாத சேதிகளையெல்லாம் சொல்லிவிடும் .

” மொழிகள் எதற்கு / கண் துளி / சொல்லும் அன்பு ”

வேறுபட்ட முரண்களை இணைத்து ஓர் காட்சியைகாட்டி வாசகனை கவிதைக்குள் அழைப்பது ஓர் வெற்றி பெற்ற உத்தி, கவிஞருக்கு இக்கலை மிகச் சிறப்பாக கை வந்திருக்கிறது என்பதற்கு ‘ இருளின் கரி எடுத்து / என்ன எழுதுகிறாய் / ஒளியின் கருணையை ‘ - என்ற உதாரணம் ஒன்று போதும்.

அதே நேரம் ஒரு தத்துவத்தையோ கோட்பாட்டையோ கவிதையாக்கும் போது அந்த தத்துவத்தை வாசகனுக்குள் கடத்துவதற்குபதிலாக அதன் சாரத்தை வார்த்தை அடுக்குளாய் அவன் மீது இறக்கி வைப்பது கவிதைக் கலையாகாது .

அதை போலவே , அழகான வரிகளை கவிதையென நம்புவதும் கூட , சாலையில் செல்கிற அழகு பெண்களெல்லாம் தன்னைத்தான் காதலிக்கிறார்கள் என்று பிரஸ்தாபிக்கும் அபத்தமின்றி வேறென்ன..?

“ ... 65,64,63,

என எண்களைச்

சுருக்கி கொண்டே வருகிறது

வெடிகுண்டு,

சீக்கிரம் ஓடிப்போய்

தொலைக்காட்சிப் பெட்டி முன்

அமர்ந்து கொள்ளுங்கள்.

சேதாரங்கள் சோகங்கள்

உங்களுக்கு

‘ லைவ் வாக வரும் “ - என்கிற கவிஞரின் கோபம் சமகால எருமை மன மந்தை மனிதர்கள் மீது விழும் கவி சாட்டை..

நீண்ட தூரம் / வந்துவிட்டீர்கள் / என்ன செய்ய போகிறீர்கள் / வழி சொல்வதைக் /கேட்க போகிறேன் ‘ - என்ற வரிகள் புவியரசு எழுதிய “ தேடாதே தேடினால் காணாமல் போவாய்

வழிகள் மாற்றி வைக்கபட்டுள்ளன “ என்ற புகழ் பெற்ற வரிகளோடு ஒப்பிடக்கூடியது.

“ கிளையில் / அமர்ந்தது பறவை / கல்லெறிய / பறந்தது சத்தம் ‘ என்ற காட்சியும் அனுபவமும் கலந்து நெய்த கவிதைகளில் வெற்றி பெறுபவர் , தத்துவ சாரஸ்களை அடுக்கும் வார்த்தை படிக்கட்டுகளில் தோற்கவும் நேரிடுகிறது.“ யாரும்என்னைத்தேடாதீர்கள் / ஜென்கவிதைகளில் / என்னைத்தேடுகிறேன். ‘ என்றவரிகளெல்லாம்ரொம்பவும்ஜென்னாகஇருப்பது . எப்போதுதொலைந்தீர்கள் , ஏன்தொலைந்தீர்கள் , எதற்காகதேடவேண்டும், என்றகேள்விகளுக்கும்முன்னால்தோன்றுகிறது ; தொலைந்துபோகிறவர்கள்முன்னறிவிப்பும்முகவரியும்கொடுத்துவிட்டுதொலைந்துபோவதில்லை ,

பெற்றோருடன்ஊருக்குபோகவிருக்கிறகுழந்தை , பார்க்கிறவர்களிடமெல்லாம் “ நாங்கஇன்னிக்குஊருக்குபோறோம்தெரியுமா” என்றுசொல்லிசொல்லிமாய்வதுபோலதனதுஅனுபவத்தேடலை flex banner வைத்துசொல்லாதகுறையாகபலஇடங்களிலும்பதிவுசெய்வதுபடைப்பாளிக்கும்வாசகனுக்குமிடையில்பெரும்இடைவெளியைஏற்படுத்திவிடக்கூடும் , ‘ மவுனமாகிவிட்டது / உணரும்போதெல்லாம் / சத்தமாகிவிடுகிறது .

வாழ்வின்தருணங்களும், கணங்களும்படைப்பனுபவத்தைதந்துகொண்டேஇருக்கும்எனநம்புகிறஇராஜாசந்திரசேகர்உடைந்தகண்ணாடிசிதறல்கள்பலவற்றிலும்பிம்பமாய்ஒளிர்கிறார்! வாசிப்பவனுக்குகாத்திருக்கிறதுஒருபுதுமையானஅனுபவம்.

மதிப்புரை - அன்பாதவன்


மதிப்புரை - அன்பாதவன்

அன்பாதவனின்சொந்தஊர்விழுப்புரம். கவிதை, சிறுகதை ,கட்டுரைஎன்றுபரந்துபட்டுஇயங்கும்அன்பாதவனின்எழுத்Ðìகளைசிறுபத்திரிக்கைகளில்அடிக்கடிபார்க்கமுடியும்.அன்பாதவன்மதியழகன்சுப்பையாவோடுஇணைந்து 'அணி' என்கிறகவிதைக்கானசிற்றிதழைநடத்துகிறார்.


திங்கள்தோறும்இரவு - அன்பாதவனின்இதமாய்பெய்யும்மழைஅந்திமழையில்வெளிவரும்....

அன்பாதவனின் ' இதமாய்பெய்யும்மழை ' பற்றியஉங்கள்கருத்துக்களை
content(at)andhimazhai.com என்றமுகவரிக்குஅனுப்பவும்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com