என்னைப் போல் ஒருவள்

இன்னொருவனின் கனவு - 24

கட்டுடைத்தவர்களின் வரலாறு இந்த அத்தியாயம்.

அந்த வரலாறு அறிய அதற்கு முன் கட்டமைக்கப் பட்ட வரலாறு அதிமுக்கியம்.

33% என்றால் யார், உங்களுக்கு ஞாபகம் வருகிறார்கள்?

இந்தியப் பெண்களுக்கான உரிமை,இந்திய பெண்கள்!

அவர்களின் 100% உரிமையை அவர்களாகவே துணிச்சலுடன் சாதித்த வரலாறு தான் இங்கே நாம் பேச இருப்பது.

முழுமையான பெண்களின் உலகம் ஒன்றை உலகத் திரையில் நிறுவும் சாத்தியக் கூறுகள் இரண்டு.

1) அது ஹீரோயின் (அ) ஹீரோயின்களின் படம்,சல்மா ஹைக்,பெனலோப் குருஸ் நடித்த 'the bandidas' மாதிரி.,ஜூலியா ராபர்ட்ஸ் நடித்த' eat pray love' மாதிரி,'erin brockovich' மாதிரி.

2) டபுள் ரோல் அல்லது பல வேடப் படங்கள்.
இரண்டாவது தேர்வுடன் அல்லது தீர்வுடன் இந்திய சினிமா வரலாறும் ஆரம்பிக்கிறது என்பது பெண்களைப் போலவே மிக விசித்திரமான ஒன்று!
விசித்திரங்களும்,குழப்பங்களும் தான் சுவாரசியமான சினிமா,எந்த மொழியிலும்.
முதன் முதலாகப் பெண்ணாக நடித்தது இந்தி,இந்திய சினிமாவில் யார் என்று தேடினால் அது ஒரு ஆண்!

அதை விட விசித்திரம் ஆரம்பகால இந்திய சினிமாவை,ஆண்களும், அவர்களின் குடும்பங்களும் அணுகிய விதம்.

எனினும்,அது ஒரு உண்மை உடைய காரணமாக இருந்தது.
பழமையின் உச்ச கட்டம் என்று சொன்னால் எங்கும் அது பெண்களின் வாழ்க்கை தான் என்கிற உண்மை.அது இந்தியாவில் நிரூபிக்கப் பட்ட இடம் சினிமா!.அது உடைந்த இடமும் சினிமா தான்.

ஏனென்றால்,குடும்பமும் பெண்களும்,பெண்களும் ஆண்களும்,ஆண்களும் பொழுது போக்கும் என்று வரையறுக்கப் பட்டிருந்த காலம் அது.


ஸ்திரீ பார்ட் என்கிற வார்த்தை அல்லது பிழைப்புக்கு உங்களுக்கு அர்த்தம் தெரிந்திருந்தால் பெண்களுக்கான இடம் அக் கால சினிமாவில் இல்லவே இல்லை என்கிற உண்மையும் தெரிந்திருக்கும்.

இந்திய சினிமாவின் பிதாமகன் ஆன,தாதா சாஹேப் பால்கே தயாரித்து,எழுதி,இயக்கி,ஒளிப் பதிவு செய்து,ஆர்ட் டைரக்டர் ஆகவும் இருந்து,எடிட் செய்து,லேப் டெக்னிசியன் வேலையும் பார்த்து ரிலீஸ் செய்த ராஜா ஹரிச்சந்திரா(1913) படத்தில் தாராமதி ஆக நடித்தவர் சலுங்கே(salunke).அவர் தான் ஹீரோ ஆகவும்,ஹீரோயின் ஆகவும் இந்திய சினிமாவில் நடித்த முதல் நடிகர் (” Lanka Dahan”-1917).பால்கே வின் ஐந்தாவது படம் இது.ராமர் ஆகவும்,சீதை ஆகவும் சலுங்கே நடித்தார்.நடுவில் பால்கே வின் இரண்டாவது படமான 'Bhasmasur Mohini” -1913-இல் கமலா என்கிற மராத்திப் பெண் நடித்தார்.அவர் தான் இந்திய சினிமாவின் முதல் பெண் ஹீரோயின்!எனினும் இது தொடர்ந்து நிகழவில்லை.

ஆக,இந்தியாவின் முதல் டபுள் ரோல் படமாக சலுங்கே வால் ராமர் ஆகவும்,சீதை ஆகவும் நடிக்கப் பட்ட லங்கா தகன் அமைந்தது.சீதை ஆகக் கூட நடிக்க அப்போது பெண்கள் முன் வரவில்லை என்கிற இப் படத் தகவலில் இருந்து,கட்டமைக்கப் பட்ட வரலாறும்,அதன் கட்டுடைதலும் ஆரம்பிக்கிறது.தாதா சாகேப் பால்கே வே தன்னுடைய படங்களுக்கு பெண் தான் ஹீரோயின் ஆக வேண்டும் என்பதில் தீவிர ஆர்வம் காட்டவில்லை என்கிறது இந்திய சினிமா வரலாறு.பெண்கள் ஆடுவதையும், பாடுவதையும், பிற ஆண்களுடன் இணைந்து நடிப்பதையும் அவர் மனம் ஏற்க வில்லை.தவிர,அப்போது நிஜமாகவே,சினிமா என்கிற விஷயம் பாலியல் தொழிலாளிகள் கூட பங்கேற்க முன் வராத அற்ப சொற்ப மாகவே இருந்தது.இன்னொரு பக்கம் ஸ்திரி பார்ட் வேஷம் கட்டிக் கொண்டிருந்த பாலகர்கள்(!) தங்களுக்குப் போட்டியாக நிஜப் பெண்கள் நாடகம்,மற்றும் சினிமாவிற்கு வருவதை விரும்பவில்லை.

இந்தியாவின் முதல் பெண் ஹீரோயின் ஆன பால்கே வின் பஸ்மாசூர் மோகினியில் நடித்த கமலா பாய் கோகலே வுக்கும் இது நடந்தது.இத்தனைக்கும்,நாடக அரங்கில் நடிகை ஆக அவர் ஏற்கனவே புகழ் பெற்றிருந்தார்.ஆனாலும்,அப்போது பெண் வேடங்களில் மிகப் புகழ் பெற்று விளங்கிய பால கந்தர்வா,கமலா கோகலே சினிமாவுக்கு வருவதை எதிர்த்தாராம்.சினி விஷன் என்கிற பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில்,கமலா கோகலே ஆரம்ப இந்திய சினிமாவில் பெண்களின் நிலை குறித்துப் பதிவு செய்திருக்கிறார்.அவர் சொல்லும் போது,"ஆண்கள் அதிலும் பெண் வேடங்களில் பிரபலம் அடைந்திருந்த ஆண்கள், தங்களின் முதல் எதிரியாக நடிக்க வரும் பெண்களை கருதினார்கள்.சில சினிமா கம்பெனிகள் அதை கொள்கை ஆகவே வைத்திருந்தன. உதாரணத்திற்கு,பால கந்தர்வா என்னுடைய கணவரை அவருடன் ஹீரோ ஆக நடிக்க அழைத்தார்.ஆனால்,என் கணவர் என்னையும் சேர்த்துக் கொள்ள சொன்ன போது,அவரையும் அந்த காரணம் காட்டி வேண்டாம் என்று சொல்லி விட்டார்"என்கிறார்.இந்த சூழ்நிலையில் பால்கே தன்னுடைய படம் ஒன்றிற்கு தன் சுய விருப்பங்களையும் மீறி,கமலா கோகலே வை நடிக்கத் தேர்வு செய்தது ஆச்சர்யமான துணிச்சல் தான்.சினிமா என்பது அற்புத விளக்கு என்பதையும்,அது பல ஆச்சர்யங்களை நிகழ்த்த இருக்கிறது என்பதையும் அவர் கணித்திருந்தார் என்பதும் இந்த ஆச்சர்யம் நிகழ ஒரு காரணமாக இருக்கலாம்.இன்னொரு பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக ஸ்திரி பார்ட் கட்டுவதை தன்மானத்திற்கு விரோதமான விஷயம் என்று அற்புதமான அக் கால முன்னணி நடிகர்கள் சிலரும் கருத ஆரம்பித்து இருந்தனர்.இன்னொரு இந்திய சினிமா பிதாமகர் ஆன சாந்தாராம் இதைத் தன் சுய சரிதையில் பதிவு செய்திருக்கிறார்! நாடகங்களில் சேலை அணியச் சொன்னபோது அவமானமாக இருந்தது என்று சொல்லும் சாந்தாராம்,தன்னுடைய முதல் சினிமா பிரவேசத்தின் போது,'surekha haran(1921)', அதில், தான் ஹீரோதான் என்பதை உறுதி செய்து கொண்டாராம்.கொடுமை என்னவெனில்,அதில் அவருக்கு ஹீரோயின் மறுபடியும் ஒரு ஆண் தான்!



பெண்கள் இந்திய சினிமாவில் நிகழ்த்திய, அடுத்த கட்ட கட்டுடைப்பு, மீண்டும் ஒரு டபுள் ரோல் சினிமாவிலிருந்து ஆரம்பிக்கிறது!

நிகழ்த்தியவர்,பானுமதி ராமகிருஷ்ணா!படம் சண்டிராணி(1953).தமிழ்,தெலுங்கு,ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியான படம்.இரட்டையர் படம்.அவரே இயக்கிய படமும் கூட.அற்புதமான பாடல்கள் நிறைந்த படம்.இசை விஸ்வநாதன்-ராமமூர்த்தி.

இந்திய சினிமாவில் பட்டொளி வீசி தன் கொடியைப் பறக்கவிட்ட பன்முக தாரகை பானுமதி ராமகிருஷ்ணா.

எழுத்தாளர்,இயக்குனர்,பாடகர்,நடிகை,இசை அமைப்பாளர், தயாரிப்பாளர், ஸ்டுடியோ அதிபர் தன் சிறுகதைகளுக்கு ஆந்திர சாகித்ய அகாதமியின் விருது பெற்றவர்,சினிமாவில் கொடுக்கப் படும் அத்தனை சிறந்த விருதுகளையும் அள்ளியவர்,பத்மவிபூஷன் பெற்றவர்,அதற்கெல்லாம் மேல் ஆண்களின் சாம்ராஜ்ய மாக இருந்த சினிமாவில்,தனி ஒரு பெண்ணாக சிங்க நடை போட்டவர் பானுமதி.100% கறார் என்பது அவர் அடையாளம்.பேரறிஞர் அண்ணாவால் நடிப்புக்கு இலக்கணம் என்று பாராட்டப் பட்டவர்.

1958-இல் இந்திய சினிமாவின் மிகச் சிறந்த படம் ஒன்று,மறக்க முடியாத இன்னொரு தாரகையின் முவ் வேடப் படமாக வெளிவந்தது.மறுபிறவி (reincarnation)குறித்து வெளிவந்த முதல் படம்.பிமல் ராய்,ரித்விக் கட்டக்,சலில் சவுத்ரி,திலீப்குமார் என்று இந்திய சினிமா ஜீனியஸ்கள் கை கோர்த்த படம்.மதுமதி.வைஜயந்திமாலா மதுமதி,மாதவி,ராதா என்று மூன்று வேடங்களில் ஜொலித்த படம்.மதுமதி படத்திற்கு அதிக பட்ச மாக ஒன்பது பிலிம் பேர் விருதுகள் கிடைத்தன.ஆனால் சிறந்த நடிகை விருது மட்டும் கிடைக்க வில்லை.ஆனால் அந்த சிறந்த நடிகை விருதை வைஜயந்திமாலா தான் வாங்கினார்,தான் பாலியல் தொழிலாளியாக நடித்த இன்னொரு படத்திற்கு.இன்னொரு ஜீனியஸ் பி.ஆர்.சோப்ரா தயாரித்து இயக்கிய படம்.sadhna(1958).சுனில்தத் கதாநாயகன்.கிட்டத் தட்ட இரட்டை வேடம் தான் அதிலும்,வைஜயந்தி மாலாவுக்கு.,சம்பா பாய் என்கிற பாலியல் தொழில் செய்யும் பெண்,தன் அம்மாவின் கடைசி கால விருப்பத்தை நிறைவேற்ற நினைக்கும் கதாநாயகனிடம் பணத்திற்காக அவனின் காதலியாக,அவன் வீட்டின் எதிர்கால மருமகள் (ரஜனி)ஆக அவன் அம்மாவிடம் நடிக்கும் வேடம் வைஜயந்திக்கு.அவள் பாலியல் தொழிலாளி என்கிற விஷயம் அம்மா,பையன்(சுனில் தத்)ஆகிய இருவருக்குமே கடைசி வரைக்கும் தெரியாது என்பது தான் ட்விஸ்ட்.தெரிய வரும்போது நிஜமாகவே அவளை காதலிக்கத் தொடங்கி இருக்கும் சுனில் தத் என்ன செய்கிறார் என்பது க்ளைமாக்ஸ்.அக் காலத்தில் மிகவும் பேசப் பட்ட துணிச்சலான கதை அம்சம் கொண்ட பாலியல் தொழிலாளிகளின் மறுவாழ்வு குறித்து நியாயமான அக்கறையும்,கேள்விகளையும் எழுப்பிய படம் சாத்னா.

மதுமதி,சாத்னா ஆகிய இரண்டு ஹிட்களை ஒரே வருடத்தில் கொடுத்த வைஜயந்தி மாலாவை மனதில் கொண்டாடாத இந்தியர்களே இல்லை அக் கால கட்டத்தில்.தமிழ்ப் படங்களில் அதிகம் நடிக்காத,நன்றாக தமிழ் பேசத் தெரிந்த சுத்த தமிழ்ப் பெண் வைஜயந்தி மாலா.கதாநாயகியாக வாழ்க்கையை ஆரம்பித்து,கடைசி வரைக்கும் கதாநாயகியாகவே திகழ்ந்தவர் வைஜயந்தி மாலா.எம்.ஜி.ஆர் மாதிரி.வஞ்சிக் கோட்டை வாலிபனில் பத்மினியுடன் அவர் போட்ட ஆட்டம் தமிழனின் மறக்க முடியாத திரை விருந்துகளில் ஒன்று.

இந்தியர்களை,இந்திய சினிமாவை தன் வசீகரத்தால் கட்டிப் போட்ட இன்னொரு சுத்த திருச்சிராப் பள்ளி தமிழ்ப் பெண், ட்ரீம் கேர்ள் ஆப் இந்தியன் சினிமா என்று தன் முதல் படத்திலேயே மகுடம் சூட்டப் பட்ட ஹேமமாலினி!அவர் இரட்டை வேடங்களில் நடித்த,ரமேஷ் சிப்பி இயக்கிய சீதா அவுர் கீதா (Seeta aur Geeta-1972) அவருக்கு முதல் பிலிம் பேர் விருதை சிறந்த நடிகைக்காக வாங்கிக் கொடுத்த படம்(அதற்கு முன் அவர் 11 முறை nominate செய்யப் பட்டிருந்தார்).பிற்கால இரட்டை வேடப் படங்கள் பலவற்றிற்கும் ட்ரெண்ட் செட்டர் ஹேமமாலினியின் சீதா அவுர் கீதா தான்!.கூட நடித்தது தர்மேந்திரா.

சீதா அவுர் கீதாவை சில பல மாற்றங்களுடன் உல்டா செய்து ஹிட் அடித்த இன்னொரு படத்தின் ஹீரோயினும் தனது இரட்டை வேட பெர்பார்மன்ஸ் கில்லியால் சிறந்த நடிகைக் கான பிலிம் பேர் விருது வென்றார்.இவரும் நூறு சதவிகித தமிழ்ப் பெண் தான்.ஹேமமாலினிக்கு அடுத்த தலைமுறை இந்திய சினிமாவின் ட்ரீம் கேர்ள்!சால்பாஸ்(ChaalBaaz-1989).ஸ்ரீ தேவி!கூட நடித்தது ரஜினி காந்த்!பிறந்தவுடனே பிரிக்கப் படுகிறார்கள் காண் ஒற்றுமை சகோதிரிகள் இருவர்.அஞ்சு,மஞ்சு (ஸ்ரீதேவி).அஞ்சு மிகவும் பயந்த சுபாவம் கொண்ட,அடிமை போன்ற பெண்ணாக வளர்க்கப் படுகிறாள் அவளுடைய கொடூர மாமனால்.இன்னொரு பக்கம் மஞ்சு ஆட்டம் பாட்டம் துணிச்சல் என வளர்கிறாள்.டான்சர் ஆக இருக்கும் மஞ்சுவுக்கு டாக்ஸி டிரைவர் ஆக இருக்கும் ரஜினியுடன் காதலும் இருக்கிறது.ஒரு கட்டத்தில் அஞ்சு வீட்டை விட்டு ஓடிப் போகிறாள்.அதே நாள் மஞ்சு தன் காதலனுடன் சண்டையிடுகிறாள்.ஆள் மாறாட்டம்,இடம் மாற்றம் ஆகிய வழக்கமான இரட்டையர் நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்றன,அதற்கப்புறம்.வாழ்க்கை இனி அவர்களுக்கு வேறு மாதிரி அமைகிறது.மஞ்சு எடுக்கும் பழிவாங்கும் படலம் படத்தின் உச்சகட்டம்.இனிமையான பாடல்களுக்காக,ஸ்ரீதேவியின் துள்ளல் நடிப்புக்காக கொண்டாடப் பட்ட படம் சால்பாஸ்.

பத்து பதினைந்து வருட இடைவெளிக்கு ஒருமுறை மாறிக் கொண்டே இருக்கும் இந்திய,இந்தி சினிமாவின் கனவுக் கன்னி ப்ளஸ் தனி ஆளுமை தாரகை ரசனையில் தொடர்ந்து சாதித்துக் கொண்டே இருந்தவர்கள் தென்னிந்திய,குறிப்பாக தமிழ் பெண்கள் என்பதும் அந்த அளவுக்கு ஏன் இங்கே உள்ள சிறந்த நடிகர்கள் பாலி வுட் டில் கொண்டாடப் படவில்லை என்பதும் இன்றும் மில்லியன் டாலர் கேள்வி.இந்தக் கேள்வியின் சமகால மிகச் சிறந்த சாதனைப் பெண் ஒருவர் தான் இந்த அத்தியாயத்தின் மில்லியன் டாலர் பேபி.ஏனெனில் இந்திய சினிமா அதன் உச்ச கட்ட போட்டிகளுடன்,எதிர்பார்ப்புகளுடன்,தொழில்நுட்ப வளர்ச்சியுடன்,உலக சினிமா ரசனைக்கு ஈடு கொடுக்க வேண்டிய தரத்தையும், உழைப்பையும், பன்முக திறனையும் தன் நட்சத்திரங்களிடம் இருந்து கேட்கத் துவங்கிய கால கட்டம்.தினம் மாறும் இந்த சினிமா சூழ்நிலையில் 1997-ல் ஆரம்பித்து -2010 வரைக்கும் இந்திய சினிமாவின் கனவுக் கன்னியாக மட்டும் இல்லாமல் ,இந்திய சினிமாவின் மிகச் சிறந்த கனவு காண்பவர்களுக்கும் விருப்பப் பட்ட ஆளுமையாகத் தன்னை நிருபித்த மங்களூரில் பிறந்த 39 வயதான ஐஸ்வர்யா ராய் பச்சன் நிஜமாகவே ஒரு அசுர சாதனையின் சொந்தக் காரர்.

அவருடைய அறிமுக முதல் படமே அவருடைய இரட்டை வேடப் படம் தான்.இருவர்-1997.சமகால இந்திய சினிமாவின் மதிப்பு மிக்க ஆளுமைகளில் ஒருவராகக் கருதப் படும் கனவு காண்பவர்களின் ஆதர்சம் மணிரத்னத் தால் அறிமுகப் படுத்தப் பட்டு,சஞ்சய் லீலா பன்சாலியின் Hum Dil De Chuke Sanam,Devdas,சுபாஷ் கை யின் Taal,ஆதித்ய சோப்ராவின் Mohabbatein,ராஜீவ் மேனனின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ரிதுபர்ன கோஷின் பெங்காலி ஒண்டர் ஆன Chokher Bali, Raincoat,அசுதோஷ் கவுரிகரின் Jodhaa Akbar,ராம் கோபால் வர்மாவின் Sarkar Raj ,மணிரத்னத்தின் ராவணன்,ஷங்கரின் ஜீன்ஸ்,எந்திரன் என்று அவர் தொட்டிருக்கும் சிகரம் சமகால சாதனை.வெறும் அழகு பொம்மை மட்டும் அல்ல பெண்கள் என்பதை இந்திய சினிமாவில் நிரூபித்த உலக அழகி ஐஸ்வர்யா ராய்.உலக சினிமா அறிந்த இந்திய நட்சத்திரம்,அவருடைய ஹாலிவுட் சினிமா முயற்சிகள் அவ்வளவு சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை எனினும்.

இருவரில் ஐஸ்வர்யா ராய் செய்திருக்கும் இரண்டு கதா பாத்திரங்களில் ஒன்று மிக சுவாரஸ்யமானது.நாம் இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் பேசிக் கொண்டிருந்த இந்திய சினிமாவில் பெண்களுக்கான இடம் குறித்த விஷயம்.அதே காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் பின்புலம் ஒன்றில்,அதைக் கட்டுடைக்கத் துடிக்கும் துள்ளல் ப்ளஸ் எள்ளல் கதாநாயகி பாத்திரம் ஆக வருவார் ஐஸ்வர்யா.மிக மிக சென்சிடிவ் ஆன,சம கால அரசியல் வரலாற்றைப் பிரதிபலிக்கும் இருவரில் ஐஸ்வர்யா ராயின் நடிகை,ப்ளஸ் அரசியல் ஆர்வ வேடம் கத்தி முனை சாகசம் தான் உண்மையில்.அதற்கான உடல்மொழி,முக பாவனை அவரிடம் இருந்து அபாரமாக வெளிப் பட்டிருக்கும்.ஐஸ்வர்யா ராயின் கண்கள் பேசக் கூடியவை.சொல்லாமல் பல விசயங்களை நிகழ்த்துபவை.அவருடைய முகபாவங்கள் தேர்ந்த நாட்டியக் கலைஞர் ஒருவரின் முகபாவங்களை தோற்கடிக்கக் கூடியது.

இருவரில் ஐஸ்வர்யா ராய் ஏற்ற இரு கதாபாத்திரங்களும் பாதியிலேயே இறந்து போய் விடுகிற அவலங்கள்.

எனினும்,இரண்டுமே,இரு மாறுபட்ட மறக்க முடியாத குண பேதங்கள்.பெண்மையின் பழமையும்,நவீனமும் மிக தத்ரூபமாக அமைந்த இருவேட நடிப்புகளில் மிகச் சிறந்த ஒன்று இருவரில் ஐஸ்வர்யா ராய் உடையது.புஷ்பா,கல்பனா என்று இரண்டு கதாபாத்திரங்கள் அவருக்கு இருவரில்.புஷ்பா கிராமத்துப் பெண்.கல்பனா கான்வென்ட் பெண்.



ஆனந்தனைத்திருமணநிச்சயதார்த்தநிகழ்வின்போதுமுதன்முதலில்பார்க்கிறாள்புஷ்பா.ஆனந்தன்(மோகன்லால்) அப்போதுசென்னையில்சினிமாவில்தீவிரமாகமுயற்சித்துக்கொண்டிருக்கும்இளைஞன்.திருமணத்தில்நாட்டமில்லாதஇளைஞன்.தொடர்முயற்சிகளும்,தோல்விகளும்அளித்தகோப,விரக்திச்சூட்டில்இருப்பவன். கண்டதும்தன்னைஇழக்கும்நிலவாகஇருக்கிறாள்புஷ்பா.சாந்தமும்,குளிர்வும்,பேரமைதியும்,வெட்கமும்,சின்னசின்னக்குறும்புகளும்,தனக்கானஎந்தக்கனவுகளும்இல்லாத,தான்வரித்தஆணின்கனவுகளைச்தானும்சுமக்கதயாராய்இருப்பவளுமானநிஜப்புராதனபெண்ணிலாஅவள்.ஆனந்தனின்வறண்டவானில்வந்தநிலவு.எல்லாஆணின்கனவு.எழுதுவதுஎளிதுசினிமாஆக்குவதுகடினம்என்றுசொல்லிஇருப்பார்சுஜாதா.விக்ரம்படத்தின்போதுபுறாக்கள்என்றுஅவர்எழுதியதைத்திரையில்கொண்டுவரகமல்ஹாசனும்,ராஜசேகரும்எவ்வளவுசிரமப்பட்டார்கள்என்பதையும்.அதையேதான்இங்கும்எடுத்தாளவேண்டியிருக்கிறது.முன்சொன்னஅத்தனையையும்,அல்லதுஅதனினும்இயல்பாகஉங்கள்கண்முன்னால்ஐஸ்வர்யாராய்பச்சன்நிகழ்த்துவதைஇருவர்படம்பார்க்கும்போதுநீங்கள்உணர்வீர்கள்.இதுஅவரின்முதல்படம்என்பதையும்மறந்து.மணிரத்னம்என்கிறகலைமாந்த்ரீகன்அங்கேஅதைஆட்டுவித்தவன்எனினும்,அந்தமாயம்ஐஸ்வர்யாராய்தான்.

இன்னொருவள்கல்பனா.ராப்இசைமாதிரி.திகுதிகுகுணம்.திருதிருபார்வை.தகதகஉடல்மொழி.சுயகனவுநிறைந்தகாட்டுப்பூ.சுயமரியாதையும்.அவளைஆனந்தன்சந்திக்கும்போது,அவனிடம்முன்னிருந்தசூடுஇல்லை.ஏனெனில்இப்போதுஅவனுக்குப்பின்நிறையசாதனைகள்சரித்திரமாகத்தொடங்கியிருக்கின்றன.அவனிடம்அசாத்தியஅமைதி,சாந்தம்,சத்தம்இல்லாததனிமைவிருப்பம்,இன்னும்மேலேஏறத்துடிக்கும்அரசியல்கணக்குகள்எல்லாம்குடியேறிஇருக்கின்றன.அவன்மறக்கஇயலாநிலவாய்இன்னும்இருக்கிறாள்புஷ்பா,அடிமனதில்.கல்பனாபற்றியபுட்டேஜ்ஒன்றைப்பார்க்கும்போது,அவன்தன்னைஇழக்கிறான்.எனினும்அவள்வேண்டாம்என்றுமுடிவெடுக்கிறான்.எனினும்விதிவலியது.புஷ்பாவுக்குஅப்புறம்அவன்திருமணம்செய்துகொண்டரமணி(கவுதமி) புஷ்பாதான்அடுத்தபடத்தில்ஆனந்தனுக்குஹீரோயின்என்கிறாள்.'இதுக்காகநீபின்னாடிரொம்பவருத்தப்படப்போற'என்றுமட்டும்சொல்கிறான்.

அதற்கப்புறம்ஆரம்பிக்கிறதுகல்பனாஎன்கிறராப்இசையின்அட்டகாசங்கள்.அதைக்காணும்நீங்களும்,நானும்,ஆனந்தனும்ஆதர்சப்புன்னகைஒன்றைத்தவிரவேறெதையும்நிகழ்த்தவில்லை.அவளின்சினிமாவிருப்பமின்மையைஅவள்வெளிப்படுத்தும்தருணத்திலும்சரி,சினிமாசெட்ஒன்றிற்குள்ஆகச்சிறந்தநடிகன்மட்டுமேபெறக்கூடியகுறைந்தபட்சமரியாதையையும்கண்டுகொள்ளாமல்,அளிக்காமல்அமர்ந்திருக்கும்போதும்சரி,அவர்பார்வையேசரிஇல்லைஎன்றுஆனந்தனைஅவமதிக்கும்போதும்சரி,அப்புறம்அவனைக்கொஞ்சம்கொஞ்சமாகப்பிடித்துப்போய்,அவனுடன்அட்டையாய்ஓட்டும்போதும்சரி,நடுவயதில்இருக்கும்அவன்தளர்ச்சியை,முதிர்வை,அமைதியை,தன்இசைக்குணத்தால்தடுமாறவைக்கும்போதும்சரி,பின்னால்அவனால்சுத்தஅரசியல்காரணங்களுக்காகஒதுக்கப்படும்போது,அவன்முகத்திற்குநேராய்கேள்வியால்அவனைஅறையும்போதும்சரி,கல்பனாஎந்தப்பெண்ணும்தானாய்இருக்கவிரும்பும்நெருப்பு.எல்லாப்பெண்ணின்கனவு.

கனவுகாண்பவன்தோற்கலாம்,அவன்கொண்டகனவு,கண்டெடுத்தகனவுதோற்காதுஎன்பதற்குசிறந்தஉதாரணம்இருவர்,மணிரத்னம்,ஐஸ்வர்யாராய்.

சிலகனவுகளைமட்டுமேநாம்மறுபடிமறுபடிகாண்போம்.அப்படிப்பட்டகனவும்இருவர்தான்.

இருவர்கட்டுடைத்தலின்உச்சவரலாறு,இந்தியசினிமாவில்,பெண்களைப்பொறுத்தவரை.

ஐஸ்வர்யாராய்அந்தகட்டுடைத்தலைநிகழ்த்தியவர்நவீனசினிமாவில்,தனக்குவாய்த்தமுதல்சந்தர்ப்பத்திலேயே.

ஏனெனில்நிலவும்,சூரியனும்என்றுஎழுதலாம்.

அதைநிகழ்த்துவதுகடினம்,வெள்ளித்திரையில்,யாருக்கும்.

அதைக்கட்டுடைத்தவர்ஐஸ்வர்யாராய்.

இன்னொருவனின்கனவு - தொடரும்

- குமரகுருபரன்
திங்கள்தோறும்இரவுகுமரகுருபரனின்'இன்னொருவனின்கனவு' அந்திமழையில்வெளிவரும்....

'இன்னொருவனின்கனவு' பற்றியஉங்கள்கருத்துக்களை content(at)andhimazhai.com என்றமுகவரிக்குஅனுப்பவும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com