புனிதப்படுத்தப்பட்ட,மிகை பிம்பங்களே மனிதனின் மனதையும்,கண்களையும் என்றைக்கும் ஈர்க்கிற முதல் விசயமாக இருந்திருக்கிறது. நிலவை நாம் அப்படித் தான் அறியத் தொடங்கினோம், நம் பாட்டிமார்களின் கதைகள் மூலமாக. ஆனால், ஓவ்வொரு மாளிகையின் பிரமாண்ட அழகிற்கும், அரண்மனையின் நளினங்களுக்கும்,பேரரசுகளின் வெற்றிக்கும்,அரசர்களின் வரலாற்றிற்கும் பின்னே சிதைந்து போன சாதாரணனின் சமூக,கலாச்சார அவலம் உறைந்து கிடக்கிறது. மன வளர்ச்சியின் பரிணாமங்களில் அவை ஒவ்வொன்றாக நம் அறிவுக்குப் புலனாக ஆரம்பிக்கின்றன.ஆப்பிளின் வெண்மையான வெற்றிச் சரிதத்துக்குப் பின்னே ஸ்டீவ் ஜாப்ஸ் என்கிற ஆளுமைக்கு, இன்சேன் (insane) குண நலன் இருந்திருக்கிறது. அவரின் கண்காணா திரிதல் ,அதீத மனம்,அதீத செயல்கள் மூலம் அவை அறியப்படுகிறது.
கண்களின் மொழியாக அறியப் படும் சினிமாவும், முதலில் புனிதப்படுத்தலையும்,மிகைப் படுத்தலையும் செய்து விட்டே, யதார்த்தத்திற்கு வந்திருக்கிறது. மாபியா பற்றிய புனிதத் துவங்கள் காட் பாதரில் நிறைந்து கிடக்கின்றன.கோப்பலாவின் அடுத்த வரிசைப் படங்கள் காட்பாதர் 2 ,காட் பாதர் 3, அந்த பிம்பத்தைச் சிதைத்து, உண்மைக்கு மிக அருகில் வர ஆரம்பிக்கின்றன.நிழலின் அதிகாரம் சிதைத்த சாதாரணர்களின் வாழ்க்கை தரிசனம் ஆக ஆரம்பிக்கிறது. அதுவே உண்மை. என் வீட்டிலும், உங்கள் வீட்டிலும், நம் தெருக்களிலும், நகரங்களிலும் சகிக்க முடியாத குரூரம்.அடுத்த தலை முறை மாபியா படங்கள் அதைக் குறித்து தான் அமைகின்றன.
ஹென்றி ஹில். ஒரு அமெரிக்கர்.பிறந்த வருடம் 1943. பிறந்த தேதி ஜூன் 11. அமெரிக்காவின் புகழ் பெற்ற தொலைக்காட்சிகளில் அவரை உட்கார வைத்து, அவர் பேசுவதை கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். டிஸ்கவரி சானல் அவரைப் பற்றி ஒரு ஆவணப்படம் தயாரித்திருக்கிறது. குறிப்பாக, நிம்மதியான ஒரு வாழ்க்கையை அவர் வாழ்கிறார். இதை அவர் விரும்பவில்லை என்பதை அவர் உதிர்க்கும் ஒரு புன்னகை காட்டிக் கொடுத்து விடக் கூடும். ஏனெனில் தனது பதிமூன்றாவது வயதில் இதை விரும்பாமல் தான் மற்றொரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார் அவர். 'அமெரிக்காவின் ஜனாதிபதி ஆவதைக் காட்டிலும் அற்புதமான மன திருப்தி எனக்கு அதில் கிடைத்தது 'என்கிறார் ஹில்.அவர் தேர்ந்தெடுத்தது ஒரு கேங்க்ஸ் ஸ்டரின் வாழ்க்கை!
தர்மம் மற்றும் அதர்மம் பற்றிய ஆத்மார்த்தமான கேள்வி,நடுத்தர,ஏழை வர்க்கத்திடம் எப்போதும் எழுந்து கொண்டே இருக்கிறது.நம் தோல்வியில் அடிக்கடி எழும் அந்த கேள்வி, அதர்மம் என நாம் அறிந்து கொண்டவற்றைச் செய்து வாழ்பவர்களின் அதிகார,பொருளாதார வெற்றிகளில் அன்றாடம் எழுகிறது.உண்மையில் தர்மத்திற்கு கட்டுப் பட்டவர்கள் வெறும் பார்வையாளர்களே இந்த உலகத்தில் என்பதை ஒரு பேக்கரியின் வரிசையில், அதன் முதலாளியின் அனுசரிப்பில்,மற்ற இடங்களில் எனக்கு கிடைத்த மரியாதையில் நான் தெரிந்து கொண்டேன். என் வயது சிறுவர்கள் எனக்காக பரிசுப் பொருட்களை என் வீட்டில் கொடுத்து விட்டுப் போனார்கள்.ஏனெனில் 'நான் அவர்களுடன் இருந்தேன்,அல்லது அவர்கள் என் பின்னால் இருந்தார்கள்' என்பதே என்கிறார் ஹென்றி ஹில்.
அவர்கள் பெயர் மாபியா. ஹென்றி ஹில் விரும்பாத பல விஷயங்கள் அவருடைய வாழ்க்கையில் நடந்து விட்டன.அவர் எப் பி ஐ யின் இன்பார்மராக அறியப் பட்டது அதில் ஒன்று. நிழல் உலகின் குரூரப் புன்னகையை நாம் புரிந்து கொள்ளக் கிடைக்கும் முன்னாள் மாபியா.2010 இல் அமெரிக்க மாபியா மியூசியத்தில் அவரது மெழுகு சிலை இடம் பெற்றது அவர் அவ்வளவு ரசிக்கும் விசயம் இல்லை எனினும் வரலாறு.
இன்னொருவர்.நிகோலஸ் பிளேக்கி.இத்தாலிய அமெரிக்கர்.அசோசியேட்டட் பிரசில் கிரைம் பத்திரிகையாளராக 58 களில் பணி ஆற்றிக் கொண்டிருந்த போது,நிழல் உலக தொடர்புகள் கிடைக்கின்றன. நியூ யார்க் இதழில் அவர் பணியாற்ற ஆரம்பித்த போது,அந்த நிழல் உலகத்திற்குள் அவர் நீண்ட தூரம் பயணித்திருந்தார். சில முக்கியமான நிழல் உலகம் தொடர்பான கட்டுரைகளுக்கப்புறம் 1986ல் ஒரு புத்தகம் எழுதுகிறார். பெயர் 'வைஸ் கை'.அதன் முக்கிய கதா பாத்திரம் ஹென்றி ஹில்.
மார்டின் ஸ்கார் ஸியை வாழும் அமெரிக்காவின் மிகச் சிறந்த இயக்குனராக நாம் அறிகிறோம். அமெரிக்க சினிமா அவருடன் நெடிய பயணத்தை மேற்கொண்டிருக்கிறது. வன்முறையிலிருந்து, ஆன்மத் தேடல் வரைக்கும் பல விசயங்களை அவர் சினிமாவில் பரிசோதித்துக் கொண்டே இருக்கிறார். அவருடைய 'டாக்ஸி டிரைவர்' உலகம் மதிக்கும் சினிமாக்களில் ஒன்று.'வைஸ் கை' புத்தகத்தை அவர் படிக்கும் போது,'தி லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆப் கிரைஸ்ட்' படத்திற்கான முனைப்புகளில் இருந்தார்.'வைஸ் கை என்னை மற்றொரு மாபியா படம் எடுக்கத் தயங்கிய மன நிலையில் இருந்து, வெளிக் கொண்டு வந்தது.காரணம் நான் படித்த மிக நேர்மையான மாபியாக்களின் உலகத்தை அது சொன்னது' என்கிறார் மார்டின்.
ஒரு புகழ் பெற்ற டெலிபோன் அழைப்பு. மார்டின் ஸ்கார்ஸி சொல்கிறார் 'நான் இதற்காகத் தான் காத்திருந்தேன், இவ்வளவு நாளும்'.
எதிர் முனையில் இருப்பவர் சொல்கிறார் 'இந்த தொலைபேசி அழைப்புக்காகத்தான் நான் இது நாள் வரை காத்திருந்தேன்.,'... நிக்கோலஸ் பிளேக்கி.
அந்த தொலைபேசி உரையாடல் ,உலக சினிமாவின் வரலாற்றில்,அடுத்த தலைமுறை மாபியா அலையை ஏற்படுத்துகிறது. மாபியா என்றால் மார்டின் ஸ்கார்ஸி என்கிற அடையாளத்தையும்.குட் பெல்லாஸ்' அதன் பெயர்.வருடம் 1990.முக்கிய கதா பாத்திரம் ஹென்றி ஹில்! (லையோட்டா.) அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டிட்யூட் இன் நூறு வருடங்கள் நூறு சினிமாக்கள் தர வரிசையில் மூன்று மாபியா படங்களே இடம் பெற்றிருக்கின்றன. காட் பாதர்,குட் பெல்லாஸ்,பல்ப் பிக்சன்.
ஹென்றி என்கிற இளைஞனின் குரலாக(self narrative) ஆரம்பிக்கிறது குட் பெல்லாஸ்.குவிக் கட்ஸ்(quick cuts), ஜம்ப் கட்ஸ் ,பிரீஸ் ப்ரேம்,என்று காமெரா அதன் உச்ச கட்ட நேர்த்தியுடன் அலைய,ஹென்றி விவரிக்கும் சம்பவங்கள் இரண்டரை மணி நேர ரோல்லர் கோஸ்ட் அனுபவத்திற்குள் நம்மைத் தள்ளுகின்றன.செல்ப் நேரேஷன் பாணியில் படம் பண்ண விரும்பும் அனைவருக்கும் குட் பெல்லாஸ் ஒரு பைபிள்.
நியூ யார்க் ,ப்ரூக்ளின்.அந்த சாலையோர டாக்ஸி ஸ்டாண்டைத் தவிர ,மற்ற எல்லாமும் அமைதியில் உறைந்திருக்கும் தெரு.ஹென்றியின் வீடும் அங்கே தான் இருந்தது. நடுத்தரக் குடும்பம்.அம்மா சிசிலி, இத்தாலி. அப்பா ஐரிஷ்.பதினோரு வயதான ஹென்றிக்கு அந்த டாக்ஸி ஸ்டாண்டின் அசாதாரண சூழல் மிகவும் பிடித்திருக்கிறது.பாலி என்றழைக்கப் படும் அந்த கனமான உடல்வாகு கொண்ட மனிதரையும்.அங்கே வந்து செல்பவர்கள் எல்லாரும் நிழல் மனிதர்கள்.இரவுகள் விடிய விடிய சீட்டாடிக் கொண்டும்,மது அருந்திக் கொண்டும் இருந்த அவர்களைக் கேட்க யாருமில்லை.அநேகமாக அவர்கள் அனைவருமே காடில்லாக் காரில் தான் வந்திறங்கினார்கள். சில பல சில்லறை வேலைகளை அவர்களுக்கு செய்து கொடுக்கும் ஹென்றியின் சுறுசுறுப்பு,பெரிய உடலும்,பெரிய மனதும் கொண்ட பாலிக்கு மிகவும் பிடித்துப் போகிறது.ஜிம்மி (ராபர்ட் டி நீரோ),டாமி(ரே பாசி) என்கிற நிழல் மனிதர்களின் அறிமுகமும், நட்பும், நம்பிக்கையும் கிடைக்கிறது.ஜிம்மி ட்ரக் மற்றும் ஏர்போர்ட் களை சூறையாடுவதில் அபார திறமையும்,ஆர்வமும் கொண்டவன்.டாம்மி எப்போது யாரை சுடுவான் என்பது யாருக்குமே விளங்காத முரட்டு மன நிலை உடையவன்.
ஹென்றியின் அடுத்த இருபது வருடங்கள் இவர்களுடனே கழிகின்றன. இப்போது ஹென்றிக்கு வசதியும்,மரியாதையும் அதிகம்.அவனுக்கு ஒரு கேர்ள் பிரெண்ட்.அவளே மனைவியும் ஆகிறாள். இரண்டு செயல்கள் ஹென்றியின் வாழ்க்கையில் திருப்பத்தையும்,சரிவையும் ஆரம்பித்து வைக்கின்றன.ஒன்று,ஹென்றிக்கு இன்னொரு பெண்ணுடன் ஏற்படும் தொடர்பு.மற்றொன்று அவனுக்கு அறிமுகம் ஆகும் போதை மருந்துகள்.இந்த இரண்டின் விளைவுகள் தான் படம். குட் பெல்லாஸ் முன் வைக்கும் நிழல் உலக உண்மைகள் சிந்திக்க வைப்பவை.அவற்றின் வரிசை இதோ.
* நிழல் உலகின் பணமும் பலமும்,அவர்கள் தரும் அசாத்திய துணிச்சலும் அபரிதமானது அவர்களைத் தொட நினைக்கும் யாருக்கும் அவர்கள் ஒரு விலை வைத்திருக்கிறார்கள்.அதிக பட்ச விலை உயிர்.
* அவர்கள் குடும்பமாக இயங்குகிறார்கள்.குடும்பமாக சுற்றுலா செல்கிறார்கள்.சேர்ந்தே இருக்கிறார்கள் அவர்களுக்குள்.மனைவி,குடும்பம்,குழந்தை என்கிற அமைப்பை அவர்கள் மதிக் கிறார்கள்,பெரும்பாலான இரவுகளை காசினோக் களிலும்,கிளப் களிலும் கழித்த போதிலும்.ஹென்றிக்கு ஏற்படும் இன்னொரு பெண் தொடர்பால்,அவன் மனைவி சீற்றமுறும்போது ஜிம்மி,பாலி இருவரும் ஹென்றியிடம் அவளுக்காக வாதிடும் காட்சியில் மாபியாவின் இத்தாலிய மனம் வெளிப் படுகிறது.
* தந்தையைப்போலபாலியும்,நண்பனைப்போலஜிம்மி,டாமியும்பார்த்துக்கொண்டபோதிலும், ஹென்றிக்குகடைசிவரைநிஜமாபியாஅந்தஸ்துமட்டும்வழங்கப்படவேஇல்லை.காரணம்,பாதிஇத்தாலியன்தான் (அம்மா)அவன்.நீங்கள்மாபியாவாகஇருக்கவேண்டும்என்றால்நீங்கள்நூறுசதவீதசிசிலியஇத்தாலியனாகஇருக்கவேண்டும்.
*அமெரிக்கசிறைச்சாலைகள்நம்மூர்திகார் ,புழல்சிறைகளின்முன்மாதிரிகள்.நீங்கள்கொட்டடியில்உழல்கிறீர்களா,அல்லதுவிடுமுறைக்குவந்திருக்கிறீர்களாஎன்பதைஉங்களின்பண,அரசியல்,குற்றபின்னணியேநிர்ணயிக்கும்.பாலி,ஹென்றி,ஜிம்மிஆகியோர்சிறையில்கழிக்கும்சிலநாட்கள்உதாரணம்.
* சிசிலியன்மாபியாக்களுக்குபோதைமருந்துவியாபாரத்தில்மிகஉறுதியானநிலைப்பாடுஇருக்கிறது. ஹென்றியின்மேல்அபாரபாசம்உள்ளபாலிஅவனைக்கைவிடுவது,ஹென்றியின்போதைமருந்துதொடர்புகளால்தான்.
* மாபியாக்கள்தங்களுக்குள்குழுவாகமதிக்கக்கடமைப்பட்டிக்கிறார்கள்.இன்னொருகுழுவைச்சார்ந்தயாரையும்கொல்லும்முன்,சம்பந்தப்பட்டகுழுவிடம்முன்அனுமதிபெறவேண்டும்.அனுமதிஇல்லாமல்கொன்றால்,அவகாசம்இன்றிகொல்லப்படுவார்கள்கொன்றவர்கள்.டாமியின்சாவுநிகழ்வதுஅப்படித்தான்.
* மாபியாக்கள்தங்களுக்குள்காட்டிக்கொடுப்பதில்லை, அதேவிசயத்தைதங்களிடம்நெருக்கமாகஉள்ளமற்றவர்களிடம்எதிர்பார்ப்பதும்இல்லை.அவர்களின்தீர்வுகொல்வதுதான். ஹென்றியைக்கொல்லஜிம்மிதிட்டமிடுவதும், பின்னர்ஹென்றிசுயசாட்சிபாதுகாப்புதிட்டத்தில்சேர்ந்துஎப்பிஐயின்இன்பார்மர்ஆகி, பாலி, ஜிம்மி, கூட்டாளிகள்அனைவரையும்காட்டிக்கொடுப்பதும்குட்பெல்லாஸ்சொல்லும்அறம்.
* இறுதியாக,மாபியாவின்உலகைநீங்கி,சாதாரணமனிதனாகவாழநினைப்பதுஉலகின்மிகப்பெரியதன்னம்பிக்கைவிஷயம்.புழுவின்வாழ்வைஏற்பதுபோல.ஹென்றியைப்போல.
குட்பெல்லாஸ்தொடங்கும்முன்னாலயே,நிஜஹென்றிஹில்லுக்கு 48000 அமெரிக்கடாலர்கள்மார்டின்ஸ்கார்ஸியால்வழங்கப்பட்டது.படம்முடிந்துசோதனைத்திரையிடலின்போது,முதல்பத்துநிமிடங்களிலேயேநாற்பதுபேர்வெளியறிவிட்டனர்.ஹென்றிஹில்படத்தைப்பார்த்துவிட்டுசொன்னது 'சரியாகஇருக்கிறது.'மார்டினின்படங்களில்மிகப்பெரியவெற்றிபெற்றதுகுட்பெல்லாஸ்தான்,அவருக்குஆஸ்கர்வங்கித்தந்தடிபார்ட்டெட் (departed)ஐவிட.
காசினோ(casino), கேங்க்ஸ்ஆப்நியூயார்க், ரோட்டுபெர்டிஷன்(road to perdition), ஸ்கார்பேஸ்(scar face), மீன்ஸ்ட்ரீட்ஸ்(mean streets), டோனிபிராஸ்கோ (donnie brasco), திஅன்டச்சபிள்ஸ்(the untouchables), ரிசர்வாயர்டாக்ஸ் (reservoir dogs),கார்டிலோஸ்வே (carlitos way),திசிசிலியன்கேர்ள்(the sicilian girl)என்றுகாணக்காணக்குறையாமல்தொண்ணூருக்கும்மேற்பட்டமாபியாபடங்கள்நிரம்பிவழிந்தாலும், டராண்டினோவின்பல்ப்பிக்சனையும் (pulp fiction), பெர்னாண்டோமெரைல்சின்சிட்டிஆப்காடையும் (city og god) காணாமல்அமையாதுசினிமாகனவு.சிட்டிஆப்காட்ஐபலபுகழ்பெற்றதமிழ்இயக்குனர்களின்படங்களில்துண்டுதுண்டாகபார்க்கும்அமைவதால்,இன்னும்தொடமுடியாதகனவாகவேஇருக்கும்டராண்டினோஎன்கிறவிசித்திரமானஇயக்குனரின்அதிவிசித்திரமானபல்ப்பிக்சனைப்பார்க்கலாம். பல்ப்பிக்சன்வெறும்மாபியாபடம்அல்ல. திரைக்கதையில்,தொழில்நுட்பத்தில்,வசனத்தில்இசையில்,முகபாவங்களில், உடல்அசைவுகளில்,அதீதமானஒருபடம்.அதன்மனிதர்கள்அதீதமானவர்கள்,அதன்இயக்குனரைப்போலவே.நிஜத்தில்அவர்களைநம்வீட்டிற்குள்அனுமதிக்கும்வாய்ப்பைமறைகழறாதஎந்தமனிதனும்யோசிக்கக்கூடமாட்டான்.குரூரத்தின்நிஜபுன்னகைஅது.படப்பிடிப்பில்பாரதிராஜாவைப்பற்றிஅறிந்திருக்கிறோம்.அவரின்அறைகள்பிரசித்திபெற்றவை.அவரைவிடநூறுமடங்குகுயின்டோன்டராண்டினோ!
அவரும்,பல்ப்பிக்சனும்,இந்தியமாபியாசினிமாவும்அடுத்தவாரம்.லெட்ஸ்டாக்சினிமா.
மாபியாகனவு - தொடரும்
- குமரகுருபரன்
திங்கள்தோறும்இரவுகுமரகுருபரனின்'இன்னொருவனின்கனவு' அந்திமழையில்வெளிவரும்....
'இன்னொருவனின்கனவு' பற்றியஉங்கள்கருத்துக்களை content(at)andhimazhai.com என்றமுகவரிக்குஅனுப்பவும்.