மலையக வாழ்க்கை

இன்னொருவனின் கனவு 31

திக்குத் தெரியாத கானகத்தில் திக்கி நிற்பதும் ஒரு வகைப் பயண அனுபவம் தான்.

அது நாம் தீர்மானிக்காத இன்னொரு பயணத்தின் ஆரம்பம்.

வழி தெரியாது தொலைந்து போனதாக உணர்கிற அந்த தருணம் ஒன்றில், நம்மை,நம் வாழ்க்கையை மறுபடி புதிதாக தீர்மானிக்கிற அதிசயம் ஆரம்பிக்கலாம்.

அதிசயங்கள் அற்று ஏது வாழ்க்கை?

நாம் காண இருக்கிற,அப்படிப்பட்ட சாதாரண மனிதனின் அதிசயம் ஒன்று, அவனின் தொலைந்து போன தருணம் ஒன்றில் ஆரம்பிக்கறது.

அந்த தொலைந்து போன மனிதனையும்,அவன் கண்டுபிடிக்கிற சில அற்புத மனிதர்களையும் அவர்களின் மனதெங்கும் வழிந்தோடும் எளிய வாழ்க்கைத் தத்துவங்களையும்,அதை அவர்களுக்குக் கற்பித்துக் கொடுத்திருக்கிற இயற்கையின் எல்லையற்ற கருணையையும் முதன் முதலில்,எழுத்தில் பதிவு செய்தவர் கே.சிவராம் காரந்த்.(October 10, 1902 – December 9, 1997)கன்னட, இந்திய எழுத்தாளர்களில்,தலை சிறந்த படைப்பாளி ஆக அறியப் படுபவர்.நவீன இந்திய இலக்கியத்தின் தாகூர் என்று புகழப் படுபவர். சமூக போராளி. கல்வியாளர்,இயற்கை ஆர்வலர்.புலிகளின் காதலர்.ஞான பீட விருது(1978) வாங்கியவர்.பத்ம பூஷனை இந்திரா காந்தியின் எமெர்ஜென்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து,திருப்பி அனுப்பியவர்.

கன்னட,இந்திய இலக்கியத்தின் மரியாதை.கன்னடர்களின் கௌரவம். கட்டுரைகளில் எழுதி அடங்கா வாழ்க்கை அவருடையது.

கே.சிவராம் காரந்தின் தலை சிறந்த பணிகளில் ஒன்று யஷ கானம் எனப்படும் அதி அற்புத ஆதி இசைக் கலையை,கூத்தை மறுபடியும் உயிர்ப்பித்தது. கர்நாடகாவின் கடலோர,மலையக பகுதிகளில் பிரசித்தி பெற்ற இந்த இசை நாடக வடிவம் கர்நாடக தாளங்களின் ஆதி வடிவம் என்று கருதப் படுகிறது.பரத நாட்டியத்தின் மூலமும் யக்ஷ கானம் தான் என்கிறார் காரந்த்.

சிறுகதை,நாவல்,கட்டுரைகள்,குழந்தை இலக்கியம்,அறிவியல் படைப்புகள் உட்பட கிட்டத்தட்ட நானூறுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி இருக்கும் மராத்தான் படைப்பாளியான கே.சிவராம்காரந்தின் நாவல்களில் ஒன்று "பெட்டட ஜீவா"(Bettada Jeeva).மலையக வாழ்க்கை.உடுப்பிக்கு அருகிலிருக்கும் கோட்டா என்னும் கடலோர நகரில் பிறந்த கோட்டா சிவராம் காரந்த் இயற்கையைக் கொண்டாடியவர்.ஞான பீடம் விருது வாங்கிய அவருடைய நாவல் "மூக்கஜ்ஜிய கனசுகலு"(ஊமைப் பாட்டியின் கனவுகள்) கூட இயற்கையின் அதிசயங்களை,அதன் மர்மங்களை, அவிழ்க்கும் படைப்பு தான்.பாட்டிக்கும்,பேரனுக்கும் இடையே நடக்கும் வாழ்க்கை பற்றிய புரிதலும் கூட.

பெட்டட ஜீவா அந்த இயற்கையின் அதிசயங்களை,மேற்குத் தொடர்ச்சி மலையின் எழிலை,அது தேக்கி வைத்திருக்கும் மலையக மனிதர்களின் கதைகளைச் சொல்லி அமைகிறது.சுதந்திரத்துக்கு முன்,நாற்பதுகளில் நிகழும் பெட்டட ஜீவாவை சினிமாவாகக் கனவு கண்டவர் வருடம் 2000தில் சினிமாவுக்கு வந்தவர்.ஆறு படங்கள் பண்ணியிருக்கிறார் முன்னுடி (A Preface-2000),அதிதி (The Guest-2001), பெரு (The Root-2004), துட்டுரி (The Bugle-2005), விமுக்தி (Liberation-2008).அவருடைய ஆறாவது படம் பெட்டட ஜீவா(man of the hills-2011).

பி.சேஷாத்ரி.

அவரைப் பற்றிக் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால்,தொடர்ச்சியாக ஆறு முறை தேசிய விருது வாங்கிய ஒரே இயக்குனர்,இந்தியாவில்! அவர் செய்த சினிமாவின் எண்ணிக்கையே ஆறுதான்.அந்த ஆறுக்கும் தேசிய விருதுகள் வாங்கியவர்.பெட்டட ஜீவா ,இயற்கையை ப் பாதுகாத்தல் ,நேசித்தல் ஆகியவற்றிற்காக 2011 இன் சிறப்பு ஜூரி தேசிய விருது வாங்கிய சினிமா.பத்திரிகையாளராக தன் வாழ்க்கையை (1987) ஆரம்பித்தவர்,,கன்னட இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்,,ஜர்னலிசத்தில் டிப்ளமோ பெற்றவர்.கன்னடத்தொலைக் காட்சிகள் அறிந்த முகம்.எண்ணற்ற சிறந்த கன்னட தொலைக் காட்சி தொடர்களை இயக்கியவர், ஆவணப் பட இயக்குனர். எளிய சினிமா தான் தன் கனவு என்று சொல்லும் எளிய மனிதர்.கன்னட சினிமாவின் சக்தி வாய்ந்த மனிதரும் கூட.

எளிய சினிமா என்பது என்னவெனில்,சேஷாத்ரியின் சினிமா அதன் ஆரம்ப பத்து நிமிடங்களுக்கு உள்ளாகவே நம் தோளில் கை போட்டு,நம்மை அவரின் கதைக் களத்துக்குள் அழைத்துச் சென்று,நம்மையும் அவருடைய கதா பாத்திரங்களுடன் சேர்ந்து நடமாட விடும் கலை தான்.

பெட்டட ஜீவா' உயர்ந்த மூங்கில்களின் வழியே வழியும் மாலைச் சூரியனின் மங்கும் வெளிச்சத்துடன் அந்த நட்ட நடு காட்டிற்குள் ஆரம்பிக்கிறது.மேற்குத் தொடர்ச்சி மலை.நமக்கு அறிமுகம் ஆகும் அந்த இளைஞனின் பெயர் நமக்கு இன்னும் சொல்லப் படவில்லை அவனால்.ஏனெனில் அவன் பதட்டத்தில் இருக்கிறான்.அவன் செல்ல வேண்டிய இடத்திற்கான பாதையை அவன் தவற விட்டு விட்டதைப் போல் தெரிகிறது.பின்னால் அதைப் பற்றி எல்லாம் கவலைப் படாத பறவைகளின் குரல்கள் இடை விடாது,இரவை வரவேற்கவென ஒலித்துக் கொண்டிருக்கின்றன.தூரத்தில் பேச்சுக் குரல் கேட்கிறது.அவர்கள் பாடிக் கொண்டே வருகிறார்கள்.அநேகமாக அது அவர்களின் நாட்டுப் புற பாடல் ஆக இருக்கலாம்.கானகத்தின் தனிமையை போக்க வென,அவர்களின் பாட்டன் மார்கள் விட்டுச் சென்ற மலையக வழித்துணை கானமாக இருக்கலாம்.இப்போது அவர்கள் அவனை நெருங்கி வந்து விட்டார்கள்.அவனைக் கண்டதும் தங்களுக்குள் பேசிக் கொண்டு,அவனிடம் பேச்சுக் கொடுக்கிறார்கள்.அவன் தன் பெயர் சிவராமு என்கிறான்.தான் சுப்ரமண்யா' பக்கத்தில் இருக்கும் பகுதிக்குப் போக வேண்டும்,வழி தவறி விட்டேன் என்கிறான்.அது மழைக் காலம்.மழையின் ஈரப் பதிவுகள் அக் கானகத்தின் ஒவ்வொரு துளியிலும் வரையப் பட்டிருக்கின்றன.இரவும்,மழையும் நெருங்கி வரும் சமயம்,இப்போது அவன் அருகில் இருக்கும் ஒரு இடத்தில் இரவைக் கழிப்பது தான் சரியாக இருக்கும் என்கிறார்கள்.அவர்கள் பெயர் தேரன்னா,பாட்டியா என்பதை அறிந்து கொள்கிறோம்.சிவராமு தான் அவர்களின் இடத்தில் தங்க விரும்புவதாகச் சொல்கிறான்.அவர்கள் அது வசதிக் குறைவு என்று சொல்லி மறுத்து,தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.இறுதியில்,அருகில் இருக்கும் கேளபைளு என்னும் இடத்தில் வசிக்கும் கோபாலய்யா வீட்டிற்கு அவனை அழைத்துச் செல்வது என்று முடிவெடுத்து அவனையும் கூட்டிக் கொண்டு நடக்கிறார்கள்.நம் கால் வலிக்கும் அளவுக்கு நடக்கிறார்கள்.மலையாக மனிதருக்கு அருகில் என்பது நமக்கு கால் வலிக்கும் தூரம் என்று புரிந்து கொள்கிறோம்.நடுவில் நதிகள்,ஓடைகள்,சின்ன ஒற்றை மரப் பாலங்கள் குறுக்கிடுகின்றன. அவர்களின் கால்கள் அவற்றை லாவகமாகத்தாண்டும் போது,சிவராமின் கால்கள் தடுமாருவதைக் கவனிக்கிறோம்.கானகத்திற்குப் பழகாத கால்கள்.அவன் பம்பாயில் இருந்து வருவதை பேச்சு வாக்கில் தெரிந்து கொள்கிறோம்.தேரன்னா வீட்டில் தீப் பந்தம் எடுத்துக் கொண்டு நடை தொடர்கிறது.ஒரு வழியாக அந்த வீட்டிற்கு வந்து விட்டோம்.தேரன்னா முகப்பில் போய் குரல் கொடுத்து விட்டு காத்திருக்கிறார்.அந்த வீட்டின் மனிதர் விறகடுப்பில் வெந்நீர் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தவர்,வெளியே வருகிறார்.அறிமுகம் நடக்கிறது.மறு பேச்சு பேசாமல் சிவராமுவை வீட்டிற்குள் வர அழைக்கிறார்.அதிதி தேவோ பவ!இயற்கை என்பது வெறும் காண் ஒளி தானா? இல்லவே,இல்லை அது ஒரு மகத்தான உணர்வுக் குவியல். இயற்கை என்னும் சக்தி அதன் மனிதர்களைச் சாந்தமாக வைத்திருக்கிறது.தன் பயமின்றி வைத்திருக்கிறது.அவர்களை மிகு நம்பிக்கையுடன் வைத்திருக்கிறது,தம் மேலும்,பிறர் மேலும்.அது விருந்தினர்களை உபசரிக்க,அவர்களை தம் வீட்டு மனிதர் போல உணர வைக்க அவர்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது.

கோபாலய்யா,சிவராமுவுக்கு நிகழ்த்துவதும் அது தான்.அங்கே மஞ்சள் பூசிய முகமும்,கருணை பூசிய கண்களும் கொண்ட பெண்மணி நமக்கு அறிமுகமாகிறார்,சங்கரம்மா.அந்த கருணை வழியும் கண்களின் உள்ளே பொத்தி வைக்கப் பட்ட சோகம் ஒன்று அவ்வப்போது நம்மைத் தொட்டு ஏதோ சொல்கிறது.வெந்நீர் விட்டுக் குளிக்கிறாயா என்று கேட்கிறார் கோபாலய்யா சிவராமுவிடம்.மிகவும் கூச்சப்பட்டவனாக,ஒரு ஓரத்தில் படுத்து எழுந்து காலையில் போய்விடுகிறேன்,வேறெதுவும் வேண்டாம் என்கிறான் சிவராமு.விருந்தினரை சாப்பிட வைக்காமல் தாம் எப்படி சாப்பிட இயலும் என்று சொன்ன படியே,மனைவியை அழைத்து அவனுக்கு காபி கொடுக்கச் சொல்லி விட்டு,அவர் குளிக்கச் செல்கிறார்.நீ பம்பாயில் இருந்தா வருகிறாய் என்று கேட்டு விட்டு,தன் மகன் சம்பு அங்கே தான் போயிருக்கிறான் என்கிறது அந்த அன்னை மனம்,அவனுக்கு காபி கொடுக்கும் வேளையில்.தேரன்னா வெற்றிலை போட்ட படியே,சிவராமுவிடம் சில நோட்டிஸ்களைக் கொடுத்து, அன்று காலை சிலரால் தன்னிடம் அளிக்கப் பட்டது,இது என்ன என்று வினவுகிறான்.அது quit india-வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடர்பான துண்டுப் பிரசுரம் என்று அறியும் சிவராமு எளிய முறையில் அதை தேரன்னாவுக்கு விளக்க எண்ணி,நீங்கள் காட்டில் தொந்தரவு செய்யும்,அழிக்க வரும் விலங்குகளை என்ன செய்வீர்கள் என்று கேட்கிறான்."விரட்டி அடிப்போம்" என்று சொல்லும் தேரன்னாவிடம்,அதே மாதிரி தான்,நம் தேசத்தை நாசம் பண்ணிக் கொண்டிருக்கும் வெள்ளையர்களை வெளியே போகச் சொல்கிற போராட்டம் பற்றிய துண்டுப் பிரசுரம் இவை என்கிறான். தேரன்னா சற்று நேரம் அமைதியாக இருந்து விட்டு,பின் சொல்கிறான்,"அப்படி என்றால் இந்த துண்டு பிரசுரத்தை அவர்களிடம்,அந்த வெள்ளையர்களிடம் அல்லவா கொடுத்திருக்க வேண்டும்? என்னிடம் ஏன் கொடுத்தார்கள்"என்று. அங்கே அசாத்தியமான அமைதி நிலவுகிறது.சாப்பிட வரச் சொல்லி அமைதி கலைக்கிறார் குளித்து விட்டு வரும் கோபாலய்யா.

சிவராமு யார்? அன்னையின் கண்களில் ஏக்கத்தைத் தேக்கி வைத்து விட்டுப் போன சம்பு யார்?ஏன் போனான்? அந்நியனை இவ்வளவு உபசரிக்கும் கோபாலய்யா யார்? தேரன்னா போன்ற மலையக மனதிடம் இந்திய சுதந்திரப் போராட்டம் குறித்த அபிப்ராயங்கள் என்னவாக இருக்கக் கூடும் என்று,ஆரம்பித்த பதினைந்து நிமிடங்களில் பெட்டட ஜீவா சினிமா எதைச் சுற்றி நிகழப் போகிறது என்று அறிவிக்கும் எளிய சினிமா சேஷாத்ரி உடையது, எனினும்,அடுத்தடுத்து அது அடுக்கிச் செல்லும் காட்சிகள் இயற்கையின்,அதன் மனிதர்களின் ஆன்ம அனுபவம் தரும் ஆச்சர்யங்கள்!நமது கண்களையும், மனதையும் ஒருசேர விசாலப்படுத்தும் மிகச் சில சினிமா அனுபவங்களில் ஒன்று பெட்டட ஜீவா!இரவுஉணவின்போது,சிவராமுவைஇன்னும்கொஞ்சநாள்தங்கிஇருக்கச்சொல்கிறார்கள்அந்தத்தனிமைத்தம்பதிகள்.மறுநாள்,விடியலில்அவனைஅழைத்துக்கொண்டுவெளியேகிளம்புகிறார்கோபாலய்யா.வெளி'யின்பரவசமூட்டும்பசேல்அனுபவம்.மேற்குத்தொடர்ச்சிமலைகளின்ஆனந்தநடனம்,குமாரபர்வதத்தின்காட்சிப்பேருவப்புஆகியவற்றுடன்தரிசனம்ஆகிறதுகோபாலய்யாவின்அற்புதமனமும்.

காணும்இடம்வரைக்கும்பச்சைமெத்தைவிரித்திருக்கும்அந்தபர்வதமுகடுகளில்அசராமல்நடக்கும்கோபாலய்யாவின்முதிர்ந்தஅனுபவம்மிக்கவிரல்களைப்பிடித்தபடிதடுமாறிநடக்கிறான்சிவராமு.அவர்கள்பேசிக்கொண்டிருக்கிறார்கள்.அந்தமலைவனத்தில்அற்புதஇயற்கைத்தோட்டம்ஒன்றைப்பயிரிட்டுஅமைத்திருக்கிறார்பெரியவர்.காட்டுமுல்லேஎனும்அந்தத்தோட்டத்தைப்பேண,நாராயணாஎன்கிறஇளைஞனைகுடிஅமர்த்திஇருக்கிறார்.அவனுக்குதிருமணமும்செய்துவைத்திருக்கிறார்.கேட்டுவியந்தபடிநடக்கிறான்சிவராமு.அந்தஇயற்கைவனப்பின்உச்சமாகதூரத்தில்தெரியும்குமாரபர்வததைக்காண்பிக்கிறார்கோபாலய்யா.நாம்வியந்துரசிக்கிறோம்.சிவராமுஉணர்ச்சிவசப்பட்டுசொல்கிறான்,இயற்கைக்குமுன்நாம்எல்லாம்சிறுஎறும்புஎன்று.சிரித்தபடிகோபாலய்யா,எறும்புஎன்றால்சாதரணமா,தன்னைக்காட்டிலும்பத்துமடங்குஅதிகச்சுமையைசுமந்துதிரியக்கூடியஇயற்கைஅற்புதம்என்கிறார்.

புன்னகைக்கவைக்கிற,நெகிழவைக்கிற,யோசிக்கவைக்கிறகாட்சிஇடங்கள்ஏராளம்,பரபரப்புஅற்றபெட்டடஜீவாவில்.அதிகம்சினிமாபார்க்காதஇன்போசிஸ்நாராயணமூர்த்தியும்,அதிகம்சினிமாவைநேசிக்கிறகிரிஷ்கர்னார்டும்பெட்டடஜீவாவைச்சிலாகித்துப்பேசும்காண்ஒளித்துண்டுகள்யூட்யூபில்காணக்கிடைக்கின்றன.பெட்டடஜீவாவின்மிகமுக்கியஅடிநாதம்இயற்கையோடுஇணைந்துவாழும்எளியமனிதர்களின்மிகஎளியமனம்.கோபாலய்யாவுக்கும்,சங்கரம்மாவுக்கும்இடையேஒளிரும்அந்தவயோதிககாதலின்,சேர்ந்துவாழ்ந்தஞாபகங்களின்காட்சிஅமைப்புநம்பிக்கைஊட்டக்கூடியதுஇந்தமுதியோர்இல்லக்காலகட்டத்திலும்.

யானைகளும்,புலிகளும்மட்டுமேஅவ்வப்போதுஇடர்தரும்அந்தஎளியகானகத்தைவிட்டும்,அதன்மனிதர்களைவிட்டும்மறுநாளும்சிவராமுகிளம்பமுடியாமல்போகிறது.புலிகளின்இடர்களில்இருந்துகாப்பாற்றும்வனதேவதைகளுக்கானகோலாஎன்னும்மலையகத்திருவிழாஆரம்பிக்கஇருப்பதால்யாரும்வெளியேசெல்லஇயலாதுஎன்கிறஐதீகத்தைச்சொல்லி,அவனைமேலும்தங்கவைக்கிறார்கோபாலய்யா.அந்தஇரவுஉக்கிரகோலாமலைநடனங்களுடனும்,குறிசொல்லிகளுடனும்கழிகிறது.அறியாதமர்மங்கள்தான்எத்தனைஎத்தனைஇந்தமேற்குத்தொடர்ச்சிமலையில்? யுனெஸ்கோ(unesco) அதைஉலகின்அறியஇயற்கைப்பொக்கிஷங்களில்ஒன்றாகக்கருதி,அதைக் 'காக்கப்பட்டஇடம்' என்றுசொல்லவலியுறுத்திக்கொண்டிருக்கிறது,மறுத்துக்கொண்டிருக்கிறதுகர்நாடகஅரசு! வெட்கம்.

மேற்குத்தொடர்ச்சிமலையின் (western ghats) அளப்பரியஇயற்கைவளத்தைச்சுரண்டகர்நாடகஅரசுசொல்லிக்கொண்டிருக்கும்விதவிதமானகாரணங்களைப்போல,ஓடிப்போனகோபாலய்யாவின்மகனானசம்புவைப்பற்றியும்ஆளுக்கொருகாரணங்கள்சொல்லப்படுகின்றனசிவராமுவிடம். நாராயணனும்,அவன்மனைவியும்அவன்திரும்பிவந்தால்தங்கள்தோட்டம்பறிபோய்விடும்என்கிறஅச்சத்தில்,அவன்சகிக்கமுடியாதகுணம்உள்ளவன்என்கிறார்கள்.கோபாலய்யாஇங்க்லீஷ்பள்ளியில்அவனைச்சேர்த்ததுதான்தவறு,அங்குதான்அவன்கெட்டுப்போனான்என்கிறார்.ஆனால்,ஒருநடுஇரவில்,சிவராமுவைஎழுப்பி,உள்ளேஅழைத்து,ஒருபெரியபொட்டலத்தைக்கொடுத்து,இதைஎல்லாம்வைத்துக்கொள்,இந்தத்தங்கத்தைசுதந்திரபோராட்டத்திற்குகொடுக்கும்படிசம்புகேட்டான்,அதைத்தான்கொடுக்கமறுத்ததால்தான்அவன்வீட்டைவிட்டுப்போனான்என்றுஉண்மையைஉடைக்கிறாள்அந்தஅன்னை.அதுவேறுயாருக்கும்தெரியாதுஎன்றும்சொல்கிறாள்.அவளைச்சாந்தப்படுத்தி,தானும்ஒருசுதந்திரப்போராட்டவீரன்தான்,கண்டிப்பாகஅவனைக்கண்டுபிடிக்கிறேன்என்கிறான்.மறுநாள்அவன்கிளம்புகிறான்.அதற்குமுன்கோபலய்யாவிடம்,இயற்கையைப்பேணுவதுஎப்படிஅவரின்ஆன்மவிசயமோ,அதேமாதிரிதான்சுதந்திரப்போராட்டம்அவரின்மகனுக்கும்,தன்னைப்போன்றஇளைஞர்களுக்கும்என்கிறான்.

பலவருடங்கள்கழித்து,அந்தகார்சுப்ரமண்யாவுக்குவருகிறது.அதற்குஅருகில்இருக்கும்கேலேபைளுவைத்தேடுகிறது.கடைசியில்காட்டுமுல்லேவைச்சொன்னதும்அந்தமக்கள்அடையாளம்காட்டுகிறார்கள்.அந்தஇடம்இப்போதுரிசார்ட்ஆகியிருக்கிறது.மெல்லநடந்துகோபாலய்யா,அவனுக்குகுமாரபர்வதத்தைக்காண்பித்தஉச்சிக்குச்செல்கிறான்சிவராமு.அங்கேசுற்றுலாப்பயணியின்அந்தபரவசவார்த்தைகளைக்கேட்கிறான்.உணர்கிறான்.

இல்லாததொன்றில்லைஇயற்கையிடம்.

தன்னுடையபருவமழைப்பயணக்கட்டுரைஒன்றில்,ஜெயமோகன்சொன்னதுமாதிரி,அன்றுஇயற்கையுடன்நாம்இருந்தோம்.அருகே.வெகுஅருகே.

இன்றுஅதைவிட்டுவிலகிஇருக்கிறோம்,தொலைவில்,வெகுதொலைவில்.

நாம்இயற்கையைத்தேடிச்செல்லவேறுஎன்னகாரணம்இருக்கமுடியும்?

நம்தவறுகள்அன்றி?

இயற்கைஅப்படியேதான்இருக்கிறது.அதேகருணையுடன்,அதேபரிவுடன்,அதேவிசாலமனதுடன்,அள்ளஅள்ளக்குறையாதவளங்களுடன்,மர்மங்களுடன்.

இப்போதும்சுப்ரமண்யாஇருக்கிறது.தட்சிணகன்னடாவில்,மங்களூருவில்இருந்துசுமார் 100 கி.மீதொலைவில், அற்புதமலைமுகடுகளுடனும்,நதிகளுடனும்,அடர்வனப்பிரதேசங்களுடனும்.அதன்சுப்ரமண்யாஆலயம்( Kukke Subrahmanya Temple) உலகப்பிரசித்திபெற்றது.

இப்போதும்குமாரபர்வதம்இருக்கத்தான்செய்கிறதுஅதேவனப்புடன்.சுப்ரமண்யாவிலிருந்து 14 கி.மீதொலைவில்.சுமார் 1712 மீஉயரத்தில்அதன்சிகரம்இருக்கிறது.மலைஏறுபவர்களின்சொர்க்கம்எனஅழைக்கப்படும்'பச்சைவழி'(green route) பெங்களூரு-மங்களூர்ரயில்பாதையில்அமைந்தஅற்புதம்.

தமிழர்கள்செல்லவேண்டியஇன்னொருஇடமும்உண்டுகர்நாடகாவில்.காவிரி,கவிழ்ப்புஅரசியல்ஆகியவற்றைத்தாண்டி,தங்கள்மொழியை,தங்கள்படைப்பாளிகளை,இலக்கியத்தை,நேசிக்கும்கன்னடர்களின்மனம்அறிய.அதுகோட்டா.டாக்டர்சிவராம்காரந்த்பிறந்தஇடம்.உடுப்பிக்குஅருகில்.இரண்டுகோடிசெலவில்,அவரின்நினைவைப்போற்றும்வகையில்அமைக்கப்பட்டஆலயத்தில்,தெப்பக்குளத்திற்குநடுவேகடவுளெனநின்றிருப்பார்சிவராம்காரந்த்.

அத்தனைமரியாதைஇருக்கும்கன்னடமண்ணில்எப்படிஉருவாகாமல்இருப்பார்கள்,தொடர்ந்துஆறுமுறைதேசியவிருதுகள்அள்ளாமல்இருப்பார்கள்சேஷாத்ரியைமாதிரிகனவுகாண்பவர்கள்?

man of the hills, பெட்டடஜீவா,கன்னடர்கள்!

-
இன்னொருவனின்கனவு - தொடரும்

- குமரகுருபரன்
திங்கள்தோறும்இரவுகுமரகுருபரனின்'இன்னொருவனின்கனவு' அந்திமழையில்வெளிவரும்....

'இன்னொருவனின்கனவு' பற்றியஉங்கள்கருத்துக்களை content(at)andhimazhai.com என்றமுகவரிக்குஅனுப்பவும்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com