பூக்கள் மட்டுமே பூக்கின்றன

பெண்ணென்று சொல்வேன் - 24

பெண்ணின்  மொழி, திசை, இசை, வாசம் வீரம்,ஈரம், கவிதை, உயிர் என பெண்பாலை பற்றிப் பேசும் உலகப்படங்களை பற்றி ஜா.தீபா எழுதும் இத்தொடர் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை அந்திமழையில் வெளிவரும். - See more at: http://andhimazhai.com/news/view/chocolat.html#sthash.OJAlJjyX.dpuf

பூக்கள் மட்டுமேப் பூக்கின்றன

பெண்ணின்  மொழி, திசை, இசை, வாசம் வீரம்,ஈரம், கவிதை, உயிர் என பெண்பாலை பற்றிப் பேசும் உலகப்படங்களை பற்றி ஜா.தீபா எழுதும் இத்தொடர் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை அந்திமழையில் வெளிவரும்.

பிறந்த தினம் முதல் வறுமையை மட்டுமே சுவாசித்து வரும் ஒரு பெண்ணை ஒருநாள் தேவதை ஒன்று சந்தித்து அவள் துன்பத்தைப் போக்கிய சிறுகதையை உலகம் முழுவதும் குழந்தைகள் வாசித்துக் கடந்திருப்பார்கள். இது போன்ற ஒரு கதையை பெர்னார்ட் ஷா கையாண்டால் எப்படி இருக்கும் என்பதன் வெளிப்பாடு ‘My FairLady’ திரைப்படம்.

1912 ஆம் ஆண்டு பெர்னார்ட் ஷா ‘pygmalion’ என்கிற ஒரு நாடகத்தை எழுதுகிறார். இதனுடைய கதையும், இதன் கதாபாத்திரங்களும் இன்று வரை பல இயக்குனர்களால், பல விதங்களாக எடுத்தாளப்பட்டிருக்கிறது. பெர்னார்ட் ஷாவுக்கே உரித்தாக இருக்கிற குறும்பும், எள்ளலும் குறைவுபடாத ‘pygmalion’ நாடகத்தை திரைப்படமாக இயக்க விரும்பினர் இரட்டை இயக்குனர்களான ஆண்டனி மற்றும் ஹவார்ட். இந்தப் படத்திற்கு பெர்னார்ட் ஷாவே திரைக்கதையையும் எழுதினார். 1938 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இலக்கியத்துக்கான நோபில் பரிசும், ஆஸ்கார் விருதும் வாங்கிய ஒரே நபராக இன்று வரை அறியப்படுகிற பெர்னார்ட்ஷாவுக்கு சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான ஆஸ்கார் விருது இந்தப் படத்தின் மூலம் கிடைத்தது.

இதோடு தொடர்ந்து பத்து வருடங்கள் ஒரே அரங்கில் ‘pygmalion’ நாடகமாக நடத்தப்பட்டதில் ஒவ்வொரு நாளுமே அரங்கு நிறைந்த காட்சிகளாகவே அமைந்தன. அப்படியும் லண்டன் மக்களுக்கு இந்த கதை மேல் இருந்த ஈர்ப்பு குறையவில்லை. இதனைப் புரிந்து கொண்ட வார்னர் பிரதர்ஸ் ‘Pygmalion’ கதையை எந்த சமரசமுமின்றி மிகுந்த பொருட்செலவில் (17 மில்லியன் டாலர் ) ‘My Fair Lady’ என்ற பெயரில் தயாரித்தது. அவர்களின் தயாரிப்பிலேயே இப்போது வரை வேறு எந்தப் படத்திற்கும் செலவிடாத தொகை இது. மன்னர் எட்வர்ட் காலத்து பின்னணியைக் கொண்ட படத்தின் பிரமாண்ட கட்டடங்களும், அப்போதைய தெருக்களும், உடைகளும் தயாரிக்கவே தனித் தொழிற்சாலையை அமைத்திருந்தது தயாரிப்பு நிறுவனம். 1964  ல் வெளிவந்த ‘my fair lady’ - யை இயக்கியது George Cukor என்பது எதிர்பார்ப்பை அதிகரிப்பதற்கு போதுமானதாயிருந்தது. காரணம், Cukor பெண்களின் இயக்குனர் என்று பெயர் பெற்றிருந்தார். லண்டன் மக்களுக்கு நீண்ட காலமாக பரிச்சயப்பட்டிருந்த எலைசா கதாபாத்திரத்தை Cukor எந்த விதமாய் காட்டப்போகிறார் என்பதில் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். எலைசாவுக்காக  Cukor  ‘அழகுப் பதுமை’ என  ரசிகர்களால் அழைக்கப்பட்ட Audrey Hepburn – ஐ தேர்ந்தெடுத்தார். இதோடு நாடகத்திலும், முந்தைய படத்திலும் இல்லாத ஒரு அம்சமாக பாடல்களையும், இசைக்கோர்வைகளையும்  அதிகம் சேர்த்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த திட்டமிட்டிருந்தனர். இத்தனை முன் தயாரிப்புகள் செய்யப்பட்ட இந்தத் திரைப்படம் வார்னர் சகோதர்களின் கணிப்புப்படி மிகப் பெரும் வெற்றிப் பெற்றது மட்டுமல்லாமல் இன்று வரை சிறந்த ஆங்கிலப் படங்களின் வரிசையிலும் தொடர்ந்து இடம் பெற்றுக் கொண்டே இருக்கிறது.

லண்டன் மாநகரத்தின் உயர்சமூக அந்தஸ்தைப் பெற்றிருக்கிறவர்கள் மட்டுமே செல்லக்கூடிய ஒரு நாடக அரங்கினைச் சுற்றியுள்ளப் பகுதியில் பூச் சந்தை ஒன்று இருக்கிறது. அங்கு பூ விற்கிற பெண்ணான எலைசா ஒரு மழை பெய்யும் இரவில் நாடக அரங்கிற்கு வெளியே வருகிற கூட்டத்தினரிடம் பூ விற்கிறாள். அந்த மழை நேரத்தில் அவளிடம் பூ வாங்கும் மனநிலை யாருக்கும் இல்லை. அவளுக்கோ அன்று முழுவதும் பூக்கள் விலைபோகவும் இல்லை. என்னச் செய்வதென்று தெரியாமல் யோசனையிலிருக்கும் அவள், அப்போது தனது அருகில் நின்று கொண்டிருக்கும் ஒருவரிடம் பூ வாங்கிக் கொள்ளும்படி கேட்கிறாள். பிக்கரிங் என்கிற பெயருடைய அந்த நபர் மறுத்துவிட, மீண்டும் மீண்டும் அவரை நச்சரிக்கத் தொடங்குகிறாள். இவளது தொல்லை தாங்கமுடியாமல், பிக்கரிங் அங்கிருந்து நடக்கத் தொடங்க, திடிரென்று பெருங்குரலெடுத்து அழத் தொடங்குகிறாள் எலைசா. கூட்டமே அவர்களைத் திரும்பிப் பார்க்க, தன்னிடம் பூ வாங்கிவிட்டு பணம் தராமல் போகிறார் எனச் சொல்லிவிட்டு மீண்டும் அழுகிறாள். பிக்கரிங் நிலைமை தர்மசங்கடமாகி விடுகிறது. தன்னை இக்கட்டிலிருந்து காப்பாற்ற யாராவது வர மாட்டார்களா என சுற்றும் முற்றும் விழிக்க, பேராசியர் ஹிக்கின்ஸ் என்பவர் தூண் மறைவிலிருந்து வெளியே வருகிறார். அவர் தனது கையில் வைத்திருக்கும் ஒரு நோட்டுப் புத்தகத்திலிருந்து சற்று முன்பு அவர்கள் இருவரும் பேசியதை வாசிக்கிறார். பிக்கரிங் ஆசுவாசமடைகிறார். சூழல் தனக்கு எதிராக திரும்பும் என்பதை சற்றும் எதிர்பார்க்காத எலைசாவுக்கும் ஆச்சர்யமும் , அதிர்ச்சியும் ஏற்படுகிறது. ‘நான் நல்ல பெண்’ என்றவாறே ஒரு ஓரமாக போய் உட்கார்ந்து கொள்கிறாள். அவளிடம் ஏமாற இருந்த பிக்கரிங் தன்னை ஹிக்கின்சிடம் அறிமுகம் செய்து கொள்கிறார்.

ஹிக்கின்ஸ் தன் பெயரை சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ள இருவரும் ஒருவருக்கொருவர் பல வருடங்களாக சந்திக்க வேண்டுமென நினைத்திருந்ததை சொல்லிக் கொள்கிறார்கள். ஹிக்கின்ஸ் லண்டனின் பிரபலமான மொழியியல் பேராசிரியர். உலக மொழிகள் அனைத்தும் பற்றி ஆராய்ச்சி செய்கிற அவருக்கு மொழி குறித்த அறிவு அதீத தற்பெருமையைக் கொடுத்திருக்கிறது.  எலைசாவின் ஆங்கில உச்சரிப்பை மட்டமானது என்றும், தீண்டத்தகாதது எனவும் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறார். இது எலைசாவுக்கு கோபத்தினை ஏற்படுத்தி விடுகிறது. ஹிக்கின்ஸ் அவளிடம் ஆங்கில மொழியின் உன்னதத்தைப் பற்றிப் பேசப் போக, எலைசாவோ தன்னுடைய ‘மட்டமான’ ஆங்கிலத்தைப் பேசிப் பேசியே அவரை மேலும் எரிச்சலாக்குகிறாள். ஹிக்கின்ஸ் அவ்வளவுத் தாக்கிப் பேசியதிலும் எலைசாவுக்கு  ஒரு விஷயம் மட்டும் ஈர்த்து விடுகிறது. ‘நீ மட்டும் நல்ல ஆங்கிலம் பேசினால் தெருத் தெருவாக பூ விற்க வேண்டியதில்லை. சொந்தமாக பூக்கடையே வைத்து நடத்தலாம்’ என்பது. அவள் அன்றைய இரவில் அதைப் பற்றியே யோசிக்கிறாள்.

மறுநாள் அவள் ஹிக்கின்சைத் தேடி அவரின் பங்களாவுக்கே சென்று விடுகிறாள். அவள் போன சமயம் பிக்கரிங்கும் அங்கு இருக்கிறார். தனக்கு ஹிக்கின்ஸ்  ஆங்கிலம் கற்றுத் தர வேண்டும் எனவும் அதன் மூலம் தான் முன்னேறப் போவதாகவும் கேட்க, மறுத்து விடுகிறார் ஹிக்கின்ஸ். இவர்களுடைய  உரையாடல் பிக்கரிங்குக்கு வேறொரு யோசனையை ஏற்படுத்தித் தருகிறது. இது போன்ற ஒரு பெண்ணுக்கு கற்றுத் தந்து, அதில் வெற்றியும் பெற்றுவிட்டால் ஹிக்கின்சின் புகழ் இன்னும் உயருமே என அந்த யோசனையை அவரிடமே சொல்கிறார். இதனை சவாலாக ஏற்றுக் கொள்கிறார் ஹிக்கின்ஸ். எலைசாவை அங்கேயே தங்க வைக்க முடிவு செய்கிறார். இதுவரை இது போன்ற வீடுகளைப் பார்த்திராத எலைசாவுக்கு அங்குள்ள ஒவ்வொன்றும் ஆச்சர்யத்தினை அளிக்கிறது. தனக்கென்று கொடுக்கப்பட்ட அழகிய, நேர்த்தியான அறையைப் பார்த்ததும் அவளுக்கு வியப்பும் திகைப்பும் ஏற்படுகிறது. தினமும் குளிக்க வேண்டும் என்பது தொடங்கி நாகரீகமாக உண்ண, உடுத்த போன்ற எல்லா பழக்க வழக்கங்களையும் கற்றுக் கொள்ளத் தொடங்குகிறாள்.

ஒரு நாள் எலைசாவின் குடிகார அப்பா தனது மகளைத் தேடி ஹிக்கின்ஸ் வீட்டிற்கு வருகிறார். வந்தவரைப் பார்த்தவுடனே அவரின் பலவீனத்தைத் தெரிந்து கொள்கிற ஹிக்கின்ஸ் அவருக்கு பணத்தைக் கொடுத்து அனுப்பி வைக்கிறார்.

தினமும் அதிகாலையில் தொடங்குகின்ற எலைசாவின் ஆங்கிலப் பாடம், நடு இரவு வரை சில நேரங்களில் மறுநாள் அதிகாலை வரைகூட நீள்கிறது. வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்க ஆ, ஈ, ஏ, ஐ, ஓ என்கிற அவள் குரல் மட்டும் வீடு முழுவதும் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது. ஆங்கிலம் கற்றுக் கொள்வது சாதாரணமான ஒன்று என்று நினைத்திருந்த எலைசாவுக்கு தூங்க முடியாமலும், நேரத்துக்கு சாப்பிட விடாமலும் நடத்தும் ஹிக்கின்சின் சர்வாதிகாரம் கோபத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்த ‘என்னை விட்டுவிடுங்கள்.நான் போய் விடுகிறேன்’’ என்று அவள் கேட்கிறாள். அப்போதெல்லாம், அவளை மிரட்டி அங்கிருந்து செல்லவிடாமல் அவளை தடுத்து விடுகிறார் ஹிக்கின்ஸ். நாள் ஆக ஆக, முயற்சிகள் பல எடுத்தும் எலைசாவால் ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்ள முடியாமல் போக அவள் சோர்ந்து போகிறாள்.

ஒரு நடுஇரவில் தன்னையே நொந்தபடி கடைமைக்காக பாடம் படித்துக் கொண்டிருக்கும் எலைசாவிடம் தனது கடுமைத்தனத்தை விட்டுவிட்டு ஹிக்கின்ஸ் உருக்கமாக பேசுகிறார் “நீ சிரமப்படுகிறாய் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நீ எவ்வளவு உயர்வான ஒரு வேலையை செய்து கொண்டிருக்கிறாய் என்பதை யோசித்துப் பார். நம்முடைய ஆங்கில மொழியின் அழகே அதன் கம்பீரத்திலும் , நேர்த்தியிலும் தானே இருக்கிறது. நம் மொழியில் இருக்கிற கவிதைத்தனமான இனிமை எத்தனை பேருடைய கற்பனையை வளர்த்தெடுத்திருக்கிறது தெரியுமா? அப்படி ஒரு மொழியை தான் நீ அடக்கி ஆளப் போகிறாய் எலைசா. உன்னால் இது நிச்சயமாக முடியும்..” என்று சொல்ல அவரின் இந்த பேச்சு எலைசாவிடம் உடனடி மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அன்றைய இரவே அவள் அதுவரை சொல்லிக் கொடுத்த பாடங்களை சரியான உச்சரிப்போடு சொல்லப் பயிலுகிறாள். அவளது உச்சரிப்பால் ஹிக்கின்சுக்குத் தாள முடியாத சந்தோசம் வந்து விடுகிறது.

கொஞ்ச நாட்களிலேயே அவளின் உச்சரிப்பை மேலும் மெருகுபடுத்தி அவளையும் மிக அழகாக அலங்காரம் செய்ய வைத்து ஒரு நிகழ்ச்சிக்குத் தன்னுடன் அழைத்து செல்கிறார். அங்கிருக்கும் உயர்தட்டு, அரச குடும்பங்களெல்லாம் எலிசாவைப் பார்த்ததும் ஏதோ ஒரு நாட்டின் இளவரசியாக இருக்கக் கூடும் என்றே நம்பத் தொடங்கி விடுகிறார்கள்.

நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பும் ஹிக்கின்ஸ் தான் ஏதோ சாதித்து விட்டதாகத் திரும்பத் திரும்பச் சொல்லி சந்தோஷப் பட்டுக் கொள்கிறார். பிக்கரிங்கும்  தன் பங்கிற்கு ஹிக்கின்சைப் புகழ்ந்து தள்ளுகிறார். இத்தனை சிரமத்திற்கிடையே, ஹிக்கின்ஸ் போன்ற ஒரு இரக்கமில்லாத நபரிடம் தான் பட்ட பாடு குறித்து அனைவரும் மறந்து போனது எலைசாவுக்கு அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருக்கிறது. அழுதுகொண்டே இனி தான் யார்? என ஹிக்கின்சிடம் கேட்க, அவரோ ‘வெறும் குப்பைத் தொட்டி போல இருந்த உன்னை எல்லோரும் தலைத் தூக்கிப் பார்க்கும் இடத்தில் உட்கார வைத்திருக்கிறேனே’ என்கிறார். தொடர்ந்து அவர் அவளின் பழைய வாழ்க்கையின் கீழ்மைகளைப் பற்றிப் பேசிக் கொண்டே போக, பொறுக்க முடியாத வேதனையிலும் சலிப்பிலும் அவர் வீட்டிலிருந்து வெளியேறுகிறாள் எலைசா.

தன்னை சிறுவயதில் இருந்து வளர்த்த தனது தெருவுக்குள் அந்த நடு இரவில்  போய் நிற்கிறாள். அவள் ஆடிப் பாடிய தெருவில் அவளுடைய பழைய சகாக்கள் வழக்கம் போல் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நேர்த்தியான உடை அணிந்து கொண்டிருக்கும் அவளை யாரும் அடையாளம் கண்டு கொள்ளாததை அவளால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போகிறது. யாரேனும் ஒருவராவது தன்னைத் தெரிந்து கொண்டு பேசமாட்டார்களா என ஒவ்வொரு முகமாக ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டே செல்கிற அவள் அங்கு தனது தந்தையை அங்கு சந்திக்கிறாள். யாருமற்ற தனிமையில் நின்று கொண்டிருக்கும் மகளைப் பற்றிய எந்த அக்கறையுமின்றி மறுநாள் தனக்கு நடக்கவிருக்கும் திருமணத்திற்காக எலைசாவை அவள் அழைக்க, அதிகபட்ச மன அழுத்தத்துக்கு ஆளாகிப் போகிறாள் எலைசா.

ஒரே நாளில் சமூகத்தின் எந்த அடுக்குகளிலும் சேர முடியாமல் தன்னந்தனியாக நின்று கொண்டிருக்கும் எலைசாவுக்குத் திரும்பத் திரும்ப ஒரு கேள்வி தான் தோன்றிக் கொண்டே இருக்கிறது. ‘நான் இப்போது யார்?’ ஒரு மொழி தன்னை ஒரு மாலையில் இளவரசனுடன் ஆட வைத்திருக்கிறது, அதே மொழி வேறு எங்கும் சேர முடியாமல் தனியாளாகவும்  நிறுத்தி வைத்திருக்கிறது. இப்படி யோசித்தபடி இருக்கும் எலைசா ஒரு முடிவினை எடுக்கிறாள். அந்த மாற்றம் ஹிக்கின்ஸ், எலைசா இருவருக்கும் சாதகமாய் அமைகிறது. அது எலைசா, ஹிக்கின்ஸ் மேல் வைத்திருக்கிற அன்புக்கும், நன்றிக்கும்  சாட்சியாகவும் இருக்கிறது.

ஹிக்கின்சை  படம் முழுக்க இரண்டு விஷயங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒன்று மொழிவளத்தை வைத்துக் கொண்டு எதையும் சாதித்து விடலாம், அது ஒரு கெளரவம் என்கிற மனநிலை. இரண்டாவது உலகத்தில் சிறந்த படைப்பு ஆண்கள் மட்டுமே என்பது. இந்த இரண்டு நம்பிக்கைகளின் மீது அவர் கொண்ட தீராத பற்றுதலே அவரை எல்லோரிடமிருந்தும் விலக்கியே வைத்திருக்கிறது. இதனை அடித்து நொறுக்குகிற வேலையை ஒவ்வொரு முறையும் எலைசா செய்துகொண்டே இருக்கிறாள்.  லண்டனின் உயர்தட்டு சமூக மக்கள் அவளின் அழகையும், நடத்தையையும் பார்த்து ஆச்சரியமும், வியப்பும் கொண்டிருக்கிற வேளையில் எலைசாவின் ஏக்கமெல்லாம் ஒரு வார்த்தை தன்னுடைய உழைப்பு குறித்து ஹிக்கின்ஸ் பாராட்டாத ஆதங்கத்திலேயே புதைந்து கொண்டிருக்கிறது.

தன்னைப் போன்ற படித்தவர்களிடம் மட்டுமே சுயமரியாதை இருக்கும் என்கிற நினைப்பில் இருக்கும் ஹிக்கின்ஸ், எலைசாவிடமிருந்து வெளிப்படுகிற கோபத்தையும், சீற்றத்தையும் கண்டு சில நேரங்களில் நிலைகுலைந்து போகிறார். அதை மறைக்க வேண்டி அவளுடைய பழைய வாழ்க்கையைப் பேசுகிற ஒரு தருணத்தில், எலைசா ஆவேசமாகிறாள். “நான் பூக்கள் தான் விற்றேன். என்னை அல்ல. நீ என்னுள் இருக்கும் நாகரிகப் பெண்ணை வெளிக்கொண்டு வந்திருக்கலாம். அதற்காக எதை வேண்டுமானாலும் நான் என்னிடமிருந்து விற்றுவிடுவேன் என எதிர்பார்க்காதே” என்கிற அவளது நியாயமான மனதைப் பின்னர் புரிந்துகொள்கிறார் ஹிக்கின்ஸ்.

மேலோட்டமாக பார்க்கிறபோது ஒரு பெண் முன்னேறுகிற கதை என்று பட்டாலும், இந்த சமூகம் வெளிப்பூச்சுகளை எப்படியெல்லாம் நம்பத் தயாராக இருக்கிறது என்பதை உணர்த்தக் கூடிய படமாகவே இது இருக்கிறது.

(ஜா. தீபா சென்னையில் வாழும் எழுத்தாளர். திரைப்படத் துறையில் உதவி இயக்குநராகப் பணிபுரிகிறார்)

பெண்ணின்  மொழி, திசை, இசை, வாசம் வீரம்,ஈரம், கவிதை, உயிர் என பெண்பாலை பற்றிப் பேசும் உலகப்படங்களை பற்றி ஜா.தீபா எழுதும் இத்தொடர் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை அந்திமழையில் வெளிவரும்.

பிறந்த தினம் முதல் வறுமையை மட்டுமே சுவாசித்து வரும் ஒரு பெண்ணை ஒருநாள் தேவதை ஒன்று சந்தித்து அவள் துன்பத்தைப் போக்கிய சிறுகதையை உலகம் முழுவதும் குழந்தைகள் வாசித்துக் கடந்திருப்பார்கள். இது போன்ற ஒரு கதையை பெர்னார்ட் ஷா கையாண்டால் எப்படி இருக்கும் என்பதன் வெளிப்பாடு ‘My FairLady’ திரைப்படம்.

1912 ஆம் ஆண்டு பெர்னார்ட் ஷா ‘pygmalion’ என்கிற ஒரு நாடகத்தை எழுதுகிறார். இதனுடைய கதையும், இதன் கதாபாத்திரங்களும் இன்று வரை பல இயக்குனர்களால், பல விதங்களாக எடுத்தாளப்பட்டிருக்கிறது. பெர்னார்ட் ஷாவுக்கே உரித்தாக இருக்கிற குறும்பும், எள்ளலும் குறைவுபடாத ‘pygmalion’ நாடகத்தை திரைப்படமாக இயக்க விரும்பினர் இரட்டை இயக்குனர்களான ஆண்டனி மற்றும் ஹவார்ட். இந்தப் படத்திற்கு பெர்னார்ட் ஷாவே திரைக்கதையையும் எழுதினார். 1938 ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இலக்கியத்துக்கான நோபல் பரிசும், ஆஸ்கார் விருதும் வாங்கிய ஒரே நபராக இன்று வரை அறியப்படுகிற பெர்னார்ட்ஷாவுக்கு சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான ஆஸ்கார் விருது இந்தப் படத்தின் மூலம் கிடைத்தது.

இதோடு தொடர்ந்து பத்து வருடங்கள் ஒரே அரங்கில் ‘pygmalion’ நாடகமாக நடத்தப்பட்டதில் ஒவ்வொரு நாளுமே அரங்கு நிறைந்த காட்சிகளாகவே அமைந்தன. அப்படியும் லண்டன் மக்களுக்கு இந்த கதை மேல் இருந்த ஈர்ப்பு குறையவில்லை. இதனைப் புரிந்து கொண்ட வார்னர் பிரதர்ஸ் ‘Pygmalion’ கதையை எந்த சமரசமுமின்றி மிகுந்த பொருட்செலவில் (17 மில்லியன் டாலர் ) ‘My Fair Lady’ என்ற பெயரில் தயாரித்தது. அவர்களின் தயாரிப்பிலேயே இப்போது வரை வேறு எந்தப் படத்திற்கும் செலவிடாத தொகை இது. மன்னர் எட்வர்ட் காலத்து பின்னணியைக் கொண்ட படத்தின் பிரமாண்ட கட்டடங்களும், அப்போதைய தெருக்களும், உடைகளும் தயாரிக்கவே தனித் தொழிற்சாலையை அமைத்திருந்தது தயாரிப்பு நிறுவனம். 1964  ல் வெளிவந்த ‘my fair lady’ - யை இயக்கியது George Cukor என்பது எதிர்பார்ப்பை அதிகரிப்பதற்கு போதுமானதாயிருந்தது. காரணம், Cukor பெண்களின் இயக்குனர் என்று பெயர் பெற்றிருந்தார். லண்டன் மக்களுக்கு நீண்ட காலமாக பரிச்சயப்பட்டிருந்த எலைசா கதாபாத்திரத்தை Cukor எந்த விதமாய் காட்டப்போகிறார் என்பதில் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். எலைசாவுக்காக  Cukor  ‘அழகுப் பதுமை’ என  ரசிகர்களால் அழைக்கப்பட்ட Audrey Hepburn – ஐ தேர்ந்தெடுத்தார். இதோடு நாடகத்திலும், முந்தைய படத்திலும் இல்லாத ஒரு அம்சமாக பாடல்களையும், இசைக்கோர்வைகளையும்  அதிகம் சேர்த்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த திட்டமிட்டிருந்தனர். இத்தனை முன் தயாரிப்புகள் செய்யப்பட்ட இந்தத் திரைப்படம் வார்னர் சகோதர்களின் கணிப்புப்படி மிகப் பெரும் வெற்றிப் பெற்றது மட்டுமல்லாமல் இன்று வரை சிறந்த ஆங்கிலப் படங்களின் வரிசையிலும் தொடர்ந்து இடம் பெற்றுக் கொண்டே இருக்கிறது.

லண்டன் மாநகரத்தின் உயர்சமூக அந்தஸ்தைப் பெற்றிருக்கிறவர்கள் மட்டுமே செல்லக்கூடிய ஒரு நாடக அரங்கினைச் சுற்றியுள்ளப் பகுதியில் பூச் சந்தை ஒன்று இருக்கிறது. அங்கு பூ விற்கிற பெண்ணான எலைசா ஒரு மழை பெய்யும் இரவில் நாடக அரங்கிற்கு வெளியே வருகிற கூட்டத்தினரிடம் பூ விற்கிறாள். அந்த மழை நேரத்தில் அவளிடம் பூ வாங்கும் மனநிலை யாருக்கும் இல்லை. அவளுக்கோ அன்று முழுவதும் பூக்கள் விலைபோகவும் இல்லை. என்னச் செய்வதென்று தெரியாமல் யோசனையிலிருக்கும் அவள், அப்போது தனது அருகில் நின்று கொண்டிருக்கும் ஒருவரிடம் பூ வாங்கிக் கொள்ளும்படி கேட்கிறாள். பிக்கரிங் என்கிற பெயருடைய அந்த நபர் மறுத்துவிட, மீண்டும் மீண்டும் அவரை நச்சரிக்கத் தொடங்குகிறாள். இவளது தொல்லை தாங்கமுடியாமல், பிக்கரிங் அங்கிருந்து நடக்கத் தொடங்க, திடிரென்று பெருங்குரலெடுத்து அழத் தொடங்குகிறாள் எலைசா. கூட்டமே அவர்களைத் திரும்பிப் பார்க்க, தன்னிடம் பூ வாங்கிவிட்டு பணம் தராமல் போகிறார் எனச் சொல்லிவிட்டு மீண்டும் அழுகிறாள். பிக்கரிங் நிலைமை தர்மசங்கடமாகி விடுகிறது. தன்னை இக்கட்டிலிருந்து காப்பாற்ற யாராவது வர மாட்டார்களா என சுற்றும் முற்றும் விழிக்க, பேராசிரியர் ஹிக்கின்ஸ் என்பவர் தூண் மறைவிலிருந்து வெளியே வருகிறார். அவர் தனது கையில் வைத்திருக்கும் ஒரு நோட்டுப் புத்தகத்திலிருந்து சற்று முன்பு அவர்கள் இருவரும் பேசியதை வாசிக்கிறார். பிக்கரிங் ஆசுவாசமடைகிறார். சூழல் தனக்கு எதிராக திரும்பும் என்பதை சற்றும் எதிர்பார்க்காத எலைசாவுக்கும் ஆச்சர்யமும் , அதிர்ச்சியும் ஏற்படுகிறது. ‘நான் நல்ல பெண்’ என்றவாறே ஒரு ஓரமாக போய் உட்கார்ந்து கொள்கிறாள். அவளிடம் ஏமாற இருந்த பிக்கரிங் தன்னை ஹிக்கின்சிடம் அறிமுகம் செய்து கொள்கிறார்.

ஹிக்கின்ஸ் தன் பெயரை சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ள இருவரும் ஒருவருக்கொருவர் பல வருடங்களாக சந்திக்க வேண்டுமென நினைத்திருந்ததை சொல்லிக் கொள்கிறார்கள். ஹிக்கின்ஸ் லண்டனின் பிரபலமான மொழியியல் பேராசிரியர். உலக மொழிகள் அனைத்தும் பற்றி ஆராய்ச்சி செய்கிற அவருக்கு மொழி குறித்த அறிவு அதீத தற்பெருமையைக் கொடுத்திருக்கிறது.  எலைசாவின் ஆங்கில உச்சரிப்பை மட்டமானது என்றும், தீண்டத்தகாதது எனவும் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறார். இது எலைசாவுக்கு கோபத்தினை ஏற்படுத்தி விடுகிறது. ஹிக்கின்ஸ் அவளிடம் ஆங்கில மொழியின் உன்னதத்தைப் பற்றிப் பேசப் போக, எலைசாவோ தன்னுடைய ‘மட்டமான’ ஆங்கிலத்தைப் பேசிப் பேசியே அவரை மேலும் எரிச்சலாக்குகிறாள். ஹிக்கின்ஸ் அவ்வளவுத் தாக்கிப் பேசியதிலும் எலைசாவுக்கு  ஒரு விஷயம் மட்டும் ஈர்த்து விடுகிறது. ‘நீ மட்டும் நல்ல ஆங்கிலம் பேசினால் தெருத் தெருவாக பூ விற்க வேண்டியதில்லை. சொந்தமாக பூக்கடையே வைத்து நடத்தலாம்’ என்பது. அவள் அன்றைய இரவில் அதைப் பற்றியே யோசிக்கிறாள்.

மறுநாள் அவள் ஹிக்கின்சைத் தேடி அவரின் பங்களாவுக்கே சென்று விடுகிறாள். அவள் போன சமயம் பிக்கரிங்கும் அங்கு இருக்கிறார். தனக்கு ஹிக்கின்ஸ்  ஆங்கிலம் கற்றுத் தர வேண்டும் எனவும் அதன் மூலம் தான் முன்னேறப் போவதாகவும் கேட்க, மறுத்து விடுகிறார் ஹிக்கின்ஸ். இவர்களுடைய  உரையாடல் பிக்கரிங்குக்கு வேறொரு யோசனையை ஏற்படுத்தித் தருகிறது. இது போன்ற ஒரு பெண்ணுக்கு கற்றுத் தந்து, அதில் வெற்றியும் பெற்றுவிட்டால் ஹிக்கின்சின் புகழ் இன்னும் உயருமே என அந்த யோசனையை அவரிடமே சொல்கிறார். இதனை சவாலாக ஏற்றுக் கொள்கிறார் ஹிக்கின்ஸ். எலைசாவை அங்கேயே தங்க வைக்க முடிவு செய்கிறார். இதுவரை இது போன்ற வீடுகளைப் பார்த்திராத எலைசாவுக்கு அங்குள்ள ஒவ்வொன்றும் ஆச்சர்யத்தினை அளிக்கிறது. தனக்கென்று கொடுக்கப்பட்ட அழகிய, நேர்த்தியான அறையைப் பார்த்ததும் அவளுக்கு வியப்பும் திகைப்பும் ஏற்படுகிறது. தினமும் குளிக்க வேண்டும் என்பது தொடங்கி நாகரீகமாக உண்ண, உடுத்த போன்ற எல்லா பழக்க வழக்கங்களையும் கற்றுக் கொள்ளத் தொடங்குகிறாள்.

ஒரு நாள் எலைசாவின் குடிகார அப்பா தனது மகளைத் தேடி ஹிக்கின்ஸ் வீட்டிற்கு வருகிறார். வந்தவரைப் பார்த்தவுடனே அவரின் பலவீனத்தைத் தெரிந்து கொள்கிற ஹிக்கின்ஸ் அவருக்கு பணத்தைக் கொடுத்து அனுப்பி வைக்கிறார்.

தினமும் அதிகாலையில் தொடங்குகின்ற எலைசாவின் ஆங்கிலப் பாடம், நடு இரவு வரை சில நேரங்களில் மறுநாள் அதிகாலை வரைகூட நீள்கிறது. வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்க ஆ, ஈ, ஏ, ஐ, ஓ என்கிற அவள் குரல் மட்டும் வீடு முழுவதும் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது. ஆங்கிலம் கற்றுக் கொள்வது சாதாரணமான ஒன்று என்று நினைத்திருந்த எலைசாவுக்கு தூங்க முடியாமலும், நேரத்துக்கு சாப்பிட விடாமலும் நடத்தும் ஹிக்கின்சின் சர்வாதிகாரம் கோபத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்த ‘என்னை விட்டுவிடுங்கள்.நான் போய் விடுகிறேன்’’ என்று அவள் கேட்கிறாள். அப்போதெல்லாம், அவளை மிரட்டி அங்கிருந்து செல்லவிடாமல் அவளை தடுத்து விடுகிறார் ஹிக்கின்ஸ். நாள் ஆக ஆக, முயற்சிகள் பல எடுத்தும் எலைசாவால் ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்ள முடியாமல் போக அவள் சோர்ந்து போகிறாள்.

ஒரு நடுஇரவில் தன்னையே நொந்தபடி கடைமைக்காக பாடம் படித்துக் கொண்டிருக்கும் எலைசாவிடம் தனது கடுமைத்தனத்தை விட்டுவிட்டு ஹிக்கின்ஸ் உருக்கமாக பேசுகிறார் “நீ சிரமப்படுகிறாய் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நீ எவ்வளவு உயர்வான ஒரு வேலையை செய்து கொண்டிருக்கிறாய் என்பதை யோசித்துப் பார். நம்முடைய ஆங்கில மொழியின் அழகே அதன் கம்பீரத்திலும் , நேர்த்தியிலும் தானே இருக்கிறது. நம் மொழியில் இருக்கிற கவிதைத்தனமான இனிமை எத்தனை பேருடைய கற்பனையை வளர்த்தெடுத்திருக்கிறது தெரியுமா? அப்படி ஒரு மொழியை தான் நீ அடக்கி ஆளப் போகிறாய் எலைசா. உன்னால் இது நிச்சயமாக முடியும்..” என்று சொல்ல அவரின் இந்த பேச்சு எலைசாவிடம் உடனடி மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அன்றைய இரவே அவள் அதுவரை சொல்லிக் கொடுத்த பாடங்களை சரியான உச்சரிப்போடு சொல்லப் பயிலுகிறாள். அவளது உச்சரிப்பால் ஹிக்கின்சுக்குத் தாள முடியாத சந்தோசம் வந்து விடுகிறது.

கொஞ்ச நாட்களிலேயே அவளின் உச்சரிப்பை மேலும் மெருகுபடுத்தி அவளையும் மிக அழகாக அலங்காரம் செய்ய வைத்து ஒரு நிகழ்ச்சிக்குத் தன்னுடன் அழைத்து செல்கிறார். அங்கிருக்கும் உயர்தட்டு, அரச குடும்பங்களெல்லாம் எலிசாவைப் பார்த்ததும் ஏதோ ஒரு நாட்டின் இளவரசியாக இருக்கக் கூடும் என்றே நம்பத் தொடங்கி விடுகிறார்கள்.

நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பும் ஹிக்கின்ஸ் தான் ஏதோ சாதித்து விட்டதாகத் திரும்பத் திரும்பச் சொல்லி சந்தோஷப் பட்டுக் கொள்கிறார். பிக்கரிங்கும்  தன் பங்கிற்கு ஹிக்கின்சைப் புகழ்ந்து தள்ளுகிறார். இத்தனை சிரமத்திற்கிடையே, ஹிக்கின்ஸ் போன்ற ஒரு இரக்கமில்லாத நபரிடம் தான் பட்ட பாடு குறித்து அனைவரும் மறந்து போனது எலைசாவுக்கு அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருக்கிறது. அழுதுகொண்டே இனி தான் யார்? என ஹிக்கின்சிடம் கேட்க, அவரோ ‘வெறும் குப்பைத் தொட்டி போல இருந்த உன்னை எல்லோரும் தலைத் தூக்கிப் பார்க்கும் இடத்தில் உட்கார வைத்திருக்கிறேனே’ என்கிறார். தொடர்ந்து அவர் அவளின் பழைய வாழ்க்கையின் கீழ்மைகளைப் பற்றிப் பேசிக் கொண்டே போக, பொறுக்க முடியாத வேதனையிலும் சலிப்பிலும் அவர் வீட்டிலிருந்து வெளியேறுகிறாள் எலைசா.

தன்னை சிறுவயதில் இருந்து வளர்த்த தனது தெருவுக்குள் அந்த நடு இரவில்  போய் நிற்கிறாள். அவள் ஆடிப் பாடிய தெருவில் அவளுடைய பழைய சகாக்கள் வழக்கம் போல் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நேர்த்தியான உடை அணிந்து கொண்டிருக்கும் அவளை யாரும் அடையாளம் கண்டு கொள்ளாததை அவளால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போகிறது. யாரேனும் ஒருவராவது தன்னைத் தெரிந்து கொண்டு பேசமாட்டார்களா என ஒவ்வொரு முகமாக ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டே செல்கிற அவள் அங்கு தனது தந்தையை அங்கு சந்திக்கிறாள். யாருமற்ற தனிமையில் நின்று கொண்டிருக்கும் மகளைப் பற்றிய எந்த அக்கறையுமின்றி மறுநாள் தனக்கு நடக்கவிருக்கும் திருமணத்திற்காக எலைசாவை அவள் அழைக்க, அதிகபட்ச மன அழுத்தத்துக்கு ஆளாகிப் போகிறாள் எலைசா.

ஒரே நாளில் சமூகத்தின் எந்த அடுக்குகளிலும் சேர முடியாமல் தன்னந்தனியாக நின்று கொண்டிருக்கும் எலைசாவுக்குத் திரும்பத் திரும்ப ஒரு கேள்வி தான் தோன்றிக் கொண்டே இருக்கிறது. ‘நான் இப்போது யார்?’ ஒரு மொழி தன்னை ஒரு மாலையில் இளவரசனுடன் ஆட வைத்திருக்கிறது, அதே மொழி வேறு எங்கும் சேர முடியாமல் தனியாளாகவும்  நிறுத்தி வைத்திருக்கிறது. இப்படி யோசித்தபடி இருக்கும் எலைசா ஒரு முடிவினை எடுக்கிறாள். அந்த மாற்றம் ஹிக்கின்ஸ், எலைசா இருவருக்கும் சாதகமாய் அமைகிறது. அது எலைசா, ஹிக்கின்ஸ் மேல் வைத்திருக்கிற அன்புக்கும், நன்றிக்கும்  சாட்சியாகவும் இருக்கிறது.

ஹிக்கின்சை  படம் முழுக்க இரண்டு விஷயங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒன்று மொழிவளத்தை வைத்துக் கொண்டு எதையும் சாதித்து விடலாம், அது ஒரு கெளரவம் என்கிற மனநிலை. இரண்டாவது உலகத்தில் சிறந்த படைப்பு ஆண்கள் மட்டுமே என்பது. இந்த இரண்டு நம்பிக்கைகளின் மீது அவர் கொண்ட தீராத பற்றுதலே அவரை எல்லோரிடமிருந்தும் விலக்கியே வைத்திருக்கிறது. இதனை அடித்து நொறுக்குகிற வேலையை ஒவ்வொரு முறையும் எலைசா செய்துகொண்டே இருக்கிறாள்.  லண்டனின் உயர்தட்டு சமூக மக்கள் அவளின் அழகையும், நடத்தையையும் பார்த்து ஆச்சரியமும், வியப்பும் கொண்டிருக்கிற வேளையில் எலைசாவின் ஏக்கமெல்லாம் ஒரு வார்த்தை தன்னுடைய உழைப்பு குறித்து ஹிக்கின்ஸ் பாராட்டாத ஆதங்கத்திலேயே புதைந்து கொண்டிருக்கிறது.

தன்னைப் போன்ற படித்தவர்களிடம் மட்டுமே சுயமரியாதை இருக்கும் என்கிற நினைப்பில் இருக்கும் ஹிக்கின்ஸ், எலைசாவிடமிருந்து வெளிப்படுகிற கோபத்தையும், சீற்றத்தையும் கண்டு சில நேரங்களில் நிலைகுலைந்து போகிறார். அதை மறைக்க வேண்டி அவளுடைய பழைய வாழ்க்கையைப் பேசுகிற ஒரு தருணத்தில், எலைசா ஆவேசமாகிறாள். “நான் பூக்கள் தான் விற்றேன். என்னை அல்ல. நீ என்னுள் இருக்கும் நாகரிகப் பெண்ணை வெளிக்கொண்டு வந்திருக்கலாம். அதற்காக எதை வேண்டுமானாலும் நான் என்னிடமிருந்து விற்றுவிடுவேன் என எதிர்பார்க்காதே” என்கிற அவளது நியாயமான மனதைப் பின்னர் புரிந்துகொள்கிறார் ஹிக்கின்ஸ்.

மேலோட்டமாக பார்க்கிறபோது ஒரு பெண் முன்னேறுகிற கதை என்று பட்டாலும், இந்த சமூகம் வெளிப்பூச்சுகளை எப்படியெல்லாம் நம்பத் தயாராக இருக்கிறது என்பதை உணர்த்தக் கூடிய படமாகவே இது இருக்கிறது.

(ஜா. தீபா சென்னையில் வாழும் எழுத்தாளர். திரைப்படத் துறையில் உதவி இயக்குநராகப் பணிபுரிகிறார்)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com