சினிமா

அடங்க மாட்டீங்களா பாஸ்..? ஒரே நாளில் 10 படங்கள்!

மிஸ்டர் முள்

தமிழ் சினிமாவில் எப்போதும் பரிதாபத்துக்குரிய ஜீவன்கள் நமது சிறு பட்ஜெட் படத்தயாரிப்பாளர்கள்தான். கையிலிருக்கிற கடைசி துட்டுவரை படத்தில் போட்டு, ரிலீஸுக்குத் தியேட்டர்கள் கிடைக்காமல் அவர்கள் அல்லாடுகிற கதை அவர்கள் எடுக்கிற படக்கதையை விட பரிதாபமானது.

நிலைமை இப்படி இருக்க, சில சமயங்களில் தங்களுக்குள் ஒரு ஒற்றுமை இல்லாமல் ஒரே நேரத்தில் எழெட்டுப் பேர் ரிலீஸுக்குக் களம் இறங்கி ஆளுக்கு ஐந்தாறு தியேட்டர்களில் படங்கள் ரிலீஸாகி அதைப் பார்க்க சிங்கிள் டிஜிட்டில் ஜனங்கள் வந்து ஷோ கேன்சலாவதும் வாடிக்கையாகி வருகிறது.

இதோ இந்த வெள்ளியன்று ரிலீஸாகும் 10 படங்களின் பட்டியல் இது.

1. என்ன விலை. 2. பீப். 3. டார்க் ஹெவன் 4. இ 1 5. பாரிஸ் கஃபே 6.ரவாளி 7. லட்சியவாதி 8.வள்ளிமலைவேலன் 9.கோல்டு கால். 10. நல்ல படம்.

இப்பட்டியலில் கருணாஸ் நடித்த ‘என்ன விலை’, குரு சோமசுந்தரம் நடித்துள்ள ‘பாரிஸ் கஃபே’ தவிர்த்து மற்ற அனைத்துமே புதுமுகங்கள் நடித்துள்ள படங்கள்.

பெரிய பட்ஜெட் சிங்கங்களே சிங்கிளா வரணும்னு நினைக்கிறப்ப ஆட்டுக்குட்டிகள் இப்படி கூட்டமா வந்து அறுபடலாமா பாஸ் ?