சினிமா

தயாரிப்பாளர் ஆனார் நடிகர் ரியோ ராஜ்!

Staff Writer

நடிகர் ரியோ ராஜ் தயாரிப்பாளராக புதிய திரைப்படமொன்றை தயாரிக்கிறார்.

ஜோ, ஆண்பாவம் பொல்லாதது ஆகிய வெற்றிப்படங்களின் மூலம் கவனிக்கப்படும் நடிகராக ரியோ ராஜ் வளர்ந்துள்ளார். இன்றைய கால இளைஞர்களுக்கான காதல் கதைகளாகத் தேர்ந்தெடுத்து நடித்தும் வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் ரியோ ராஜ் ’ரிவர் ரூட் ஸ்டூடியோஸ்’ என்கிற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனமொன்றைத் தொடங்கியுள்ளார்.

இதன் அறிவிப்பு கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது. நடிகர்களாக யூடியூபில் கவனம்பெற்ற ராம் வசந்த் மற்றும் ஆண்பாவம் பொல்லாதது திரைப்படத்தின் எடிட்டர் வருண் கேஜி ஆகியோர் நடிக்கவுள்ளனர்.