ஆகஸ்ட் 3ம் தேதியன்று தொடங்கியிருக்க வேண்டிய அஜித்தின் ‘டேர் டெவில்’ படப்பிடிப்பு மாத இறுதிக்கு தள்ளப்பட்டு தற்போது அதுவும் சந்தேகம் சந்தேகம், படப்பிடிப்பு தொடங்க மேலும் இரு மாதங்கள் வரை ஆகலாம் என்கிறார்கள் படக்குழு வட்டாரத்தில்.
என்னதான் நடக்கிறது என்று சற்று இறங்கி விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் ஷாக் அடிக்கின்றன.
ரேஸ் வெறியை கொஞ்சம் ஸ்ட்ராங்காகவே மூட்டை கட்டிவைத்துவிட்டு நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தே ஆகவேண்டும் என்கிற நிஜமான எண்ணத்துடன்தான் இந்த ‘டேர் டெவில்’ படத்துக்காக ஓடியாடிக்கொண்டிருக்கிறார் அஜித். எடுப்பது சொந்தப்படம் என்றாலும் மற்ற தயாரிப்பாளர்களைப் போலவே சொந்தப் பணத்தில் கைவைக்காமல் ஃபைனான்ஸ் வாங்கிப்படமெடுப்பதுதான் அவரது திட்டமும். அதற்காக அஜித் சொன்ன இடத்திலெல்லாம் கையெழுத்துப்போட அவரது மனைவி ஷாலினி தயாராக இருந்தாலும் அவர்கள் நினைத்த அளவுக்கு சுலபமாக நிதி கிடைக்கவில்லை.
காரணம் தன் படம் குறித்து அஜித்துக்கு இருக்கும் நம்பிக்கை ஃபைனான்சியர்களுக்கு இல்லை. இதுதான் படப்பிடிப்பு தள்ளிப்போனதற்கு நிஜ காரணம் என்கிறார்கள்.
நிலைமையைப் புரிந்துகொண்ட அஜித் தனது நெருங்கிய வட்டாரத்தில் ஆலோசனை நடத்திய வகையில் ‘டேர் டெவிலை’ பான் இந்திய படமாக மாற்றினால் கல்லா கட்டலாம் என்று முடிவாகியிருக்கிறது. எனவே ஏற்கனவே முடிவு செய்த கதையை பட்டி டிங்கரிங் பார்த்து மலையாள, தெலுங்கு, கன்னட, பாலிவுட் டாப் நட்சத்திரங்களை உள்ளே கொண்டுவர முடிவு செய்திருக்கிறார்கள். இதன் மூலம் அந்தந்த மாநிலங்களில் அஜித்தின் மார்க்கெட்டும் சற்று உயரலாம் என்கிற கணக்கும் இதில் இருக்கிறது.
வாழ்க்கையில மறுபடியும் மறுபடியும் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு நிமிஷத்தையும் ஒவ்வொரு நொடியையும் அவரை செதுக்க வச்சுட்டே இருக்கீங்களே பாஸ்.