தொடர்ந்து இளசுகளின் ஆட்டத்தைப் பார்த்து டயர்டாகியிருந்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ’ரோஜா’ படத்தில் ஆயாக்களின் குத்தாட்டத்தை வழங்கி குஷிப்படுத்தியிருந்த மணிரத்னம் தற்போது உலக சினிமாவில் முதல்முறையாக கர்ப்பிணி பெண்களின் குத்தாட்டத்தை வழங்கி கோடம்பாக்கத்தையே குலுங்க வைத்திருக்கிறார்.
‘பொன்னியின் செல்வன் 2’, ‘தக் லைஃப்’ ஆகிய தொடர் தோல்விகளுக்குப் பிறகு மணிரத்னம் இயக்கிவரும் படம் ‘இஞ்சி வெல்லம்’. விஜய் சேதுபதி, சாய்பல்லவி ஜோடியின் இப்படம் ’27 ஜனவரி மாத இறுதி வாரத்தில் ரிலீஸாகவிருக்கும் நிலையில் ‘ஆச்சி ஆச்சி’ பாடலின் முதல் சிங்கிள் நவம்பர் 25 அன்று ரிலீஸானது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில், நவகவி இளங்கோ கிருஷ்ணன் பாடல் எழுதியிருக்கிறார்.
பாடலைப் பார்த்தவர்களுக்கு முதல் அதிர்ச்சி சாய் பல்லவியின் தோற்றம். பாய் கட் ஹேர் ஸ்டைலுடன் நிறைமாத கார்ப்பிணியாக அவர் தோன்றியதை பார்வையாளர்கள் ரசிக்கவில்லை. அதே தோற்றம் கொண்ட வடிவுக்கரசி புகைப்படம் ஒன்றையும் நடன அரசி மதுவந்தியின் அதே சாயல் கொண்ட புகைப்படங்களையும் பதிவிட்டு மக்கள் வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர். சாய் பல்லவி மட்டுமல்லாது குரூப் டான்சர்களில் சிலரும் நிறைமாத கர்ப்பிணிகளாக கலக்கல் ஸ்டெப் போடுகிறார்கள்.
இப்பாடல் வழக்கம்போல வைரல் ஆகியிருக்க, ஆதரிப்போரை விட கொந்தளிப்போர் அதிகம் இருக்கிறார்கள். மணிரத்னம் ஏன் இப்பிடி கர்ப்பிணிகளை குத்தாட்டம் போட வைக்கும் அளவுக்கு தரம் தாழ்ந்துபோனார்? எதிர்காலத்தில் இன்னும் யாரையெல்லாம் குத்தாட்டம் போட வைப்பார் ?? என்று மக்கள் கொந்தளிக்கிறார்கள்.
இன்னொரு ஆச்சர்யம் இப்பாடல் தொடர்பாக யூடியூபர்கள் மகப்பேறு மருத்துவர்களை பேட்டி கண்டு போடாமல் இருப்பது.
ஆச்சி ஆச்சி அய்யா மணிரத்னத்துக்கு என்னதான் ஆச்சி?