அனந்திதா சுந்தர்  
சினிமா செய்திகள்

என்னைத் திருநர் என்கிறார்கள்... குஷ்பு மகள் அனந்திதா

Staff Writer

குஷ்பு மகள் அனந்திதா சுந்தர் அண்மையில் அளித்த பேட்டியில், தான் திருநர் போல இருப்பதாக சமூக ஊடகங்களில் உருவகேலி செய்வது வருத்தமளிக்கிறது என்று கூறியுள்ளார்.

சில நாள்களுக்கு முன் வெளியான 'டபுள் ஆக்குப்பன்சி' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் அனந்திதா சுந்தர் பேசிவருகிறார். அதைத் தொடர்ந்து மக்கள் பலரும் தன்னை உருவகேலி செய்துவருவது வருத்தமளிக்கிறது என்று கூறினார்.

ஜேஎஃப்டபிள்யூ பேட்டியில் அவர் இதுபற்றிக் கூறியுள்ளதாவது:

"திருநர்கள் பலரை எனக்குத் தெரியும். அவர்கள் அவ்வளவு அழகாக இருப்பார்கள்; அன்பாகவும் பழகுவார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் குண்டாக இருக்கிறேன் என்றார்கள். இப்போது ஒல்லியானதும் திருநர் போல இருக்கிறேன் என்கிறார்கள்.

நான் சமூக ஊடகத்தில் பதிவிடும் படங்களுக்கு வரும் 100 கமெண்ட்களில் 90 கமெண்ட்கள் என் தோற்றத்தை கேலி செய்யும் வகையில்தான் வருகின்றன. மக்கள் இவ்வளவு அன்பற்றவர்களாக இருக்கிறார்கள்.

இதுவரை இவற்றை நான் தைரியமாகத்தான் எதிர்கொண்டேன் என்று நம்புகிறென். இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் எனக்கு இதுபோன்ற கருத்துகள் பழக்கமாகிவிட்டது என்பதுதான்." என்றார் அனந்திதா.