வெற்றிகரமான இயக்குநராக மட்டுமின்றி சில படங்களைத் தயாரிக்கவும் செய்த வெற்றிமாறன் ‘பேட் கேர்ள்’ படத்தின் படுதோல்வியைத்தொடர்ந்து அப்பட விழா மேடையிலேயே ‘ கடையை இழுத்து மூடியாச்சி. இனி படம் தயாரிப்பதாக இல்லை’ என்று அறிவித்து இண்டஸ்ட்ரிக்கே ஷாக் கொடுத்தார்.
ஆனால் ஒரு ஜாக்பாட் புராஜக்ட் கிடைத்திருப்பதால் மீண்டும் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார் என்று அதே இண்டஸ்ட்ரியில் செய்தி புகைந்துகொண்டிருக்கிறது. சமாச்சாரம் இதுதான். விஜய்சேதுபதியை வைத்து இயக்க, இயக்குநர் பாலா ஒரு கதை சொல்லியிருக்கிறார். முன்னரே ஒப்புக்கொண்ட இரண்டு படங்கள் நடித்து முடித்தபிறகு பாலா இயக்கத்தில் நடிக்க விஜய் சேதுபதியும் ஓ.கே.
இப்படத்தைத்தான் வெற்றிமாறன் தயாரிக்கவிருக்கிறார். இசையமைக்கவிருப்பது சிறு வயது சாதனையாளரான லிடியன் நாதஸ்வரம் என்று புகைகிறது அச்செய்தி.
ஆனால் வெற்றிமாறன் வட்டாரத்தில் விசாரித்தபோது, சந்திப்பு, பேச்சு வார்த்தை நடந்ததெல்லாம் உண்மைதான். வி.சேதுபதிக்கும் வெற்றிமாறனுக்கும் சும்மா ரெண்டு நிமிடக் கதைதான் சொல்லியிருக்கிறார் பாலா. அவர் முழுக்கதையையும் தயார் செய்து படத்துக்கான முழு பட்ஜெட்டையும் கொடுத்தால்தான் வெற்றிமாறன் தான் தயாரிக்கவிருப்பதை அறிவிப்பார் என்கிறார்கள்.
பேட்கேர்ள் இழுத்துச் சாத்திய கடையை ஒருவேளை பாலா மீண்டும் திறக்கவைப்பாரெனில் படத்துக்கு நிச்சயமாக ‘குட் பாய்’ என்று டைட்டில் வைக்கலாம்.