சினிமா செய்திகள்

30 ஆண்டுகளைக் கொண்டாடும் இந்திப் படம்- லண்டனில் சிலை!

Staff Writer

முப்பது ஆண்டுகளைக் கொண்டாடும் இந்திப் படம் ஒன்றுக்காக பிரிட்டன் தலைநகர் லண்டனில் பொது அரங்கில் சிலை வைக்கப்பட்டுள்ளது.  

இலண்டன் லீசெஸ்டர் சதுக்கத்தில் தில்வாலே துல்கானியா லீ ஜெயங்கே என்ற இந்தித் திரைப்படத்தில் இடம்பெற்ற ராஜ், சிம்ரன் ஆகிய கதாபாத்திரங்களுக்குதான், இந்தச் சிறப்பு கிடைத்துள்ளது.

இப்படியான முதல் பெருமை, இந்தியப் படம் ஒன்றுக்கு இதன்மூலம் கிடைத்துள்ளது.

இலண்டனில் இந்த வெண்கலச் சிலையை, அந்தப் பாத்திரங்களில் நடித்த சாருக்கானும் கஜோலும் சேர்ந்து திறந்துவைத்தார்கள்.

இதைப் பற்றி தன் சமூக ஊடகப் பக்கங்களில் பதிவை வெளியிட்டுள்ள சாருக் கான், இலண்டனில் இருந்தால் வாருங்கள், மக்கா... ராஜையும் சிம்ரனையும் சந்திக்கலாம் என ஜாலியாகக் குறிப்பிட்டுள்ளார்.