சினிமா செய்திகள்

'துருவ் விக்ரமின் டேட்டிங்கும் சீட்டிங்கும்’ – அணுகுண்டு வீசும் நடிகை அனுபமா !

Staff Writer

மாரி செல்வராஜ் இயக்கிய ‘பைசன் காளமாடன்’ படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரனை தீவிரமாக காதலித்து வந்த நடிகர் துருவ் விக்ரம் தனது தந்தை அக்காதலை எதிர்த்ததால் பின் வாங்கியிருப்பது பெரும் சர்ச்சையாகியிருக்கிறது.

வெளிவராத ‘வர்மா’ வெளிவந்தும் தோலிவி அடைந்த ‘ஆதித்ய வர்மா’ அடுத்து வந்த ‘மஹான்’ படங்கள் மூலம் வெற்றிபெறாத துருவ், மாரி செல்வராஜ் இயக்கத்தில் இயக்கத்தில் வெளிவந்த ‘பைசன்’ மூலம் பரவலான கவனம் பெற்றார்.

அப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். படப்பிடிப்பின்போது நெருக்கமாக பழகியவர்கள் பின்னர் காதலிக்கவும் தொடங்கி டேட்டிங் என்ற பெயரில் பல ஸ்பாட்களுக்கு காதலர்களாக பயணித்தனர். இவர்கள் காதலிக்கிறார்கள் என்று சிலர் செய்தி வெளியிட்டபோது வழக்கம் போல் மறுத்தனர்.

இந்நிலையில் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அனுபமா துருவை நெருக்கியதாகவும் அதற்கு தனது அப்பா ஒப்புக்கொள்ளவில்லை என்று துருவ் அவரை கழட்டிவிட்டதாகவும் செய்திகள் பரவிக்கொண்டிருக்க, அச்செய்தியை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக மலையாள சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ள அனுபமா, ‘ஒரு சமயம் ரெமோ போல் அவ்வளவு அன்பாகப் பழகுவார். அடுத்த சமயம் அந்நியன் போல் மாறி சைக்கோத்தனமாக நடந்துகொள்வார். இந்த ஆசாமியையா காதலித்தோம் என்று ஆச்சர்யமாக இருக்கும்’ என்று மிக வெளிப்படையாகவே துருவை குற்றம் சாட்டியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram